ரூ.1 கோடி 20 ஆண்டுகளில் சேர எவ்வளவு முதலீடு தேவை?
ரூ.1 கோடி 20 ஆண்டுகளில் சேர எவ்வளவு முதலீடு தேவை?
20 ஆண்டுகள் கழித்து ஒருவர் ஓய்வுக் காலத்துக்கு ரூ.1 கோடி தேவை. அதற்கு மாதம் ரூ.5,000 வீதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால் போதுமா? எனபதை பற்றி அறிவோம்.
“நீங்கள் மாதம் ரூ.5,000 வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைத்தால்கூட சுமார் ரூ.75 லட்சம்தான் கிடைக்கும். இதுவே மாத முதலீட்டை 6,700 ரூபாயாக அதிகரித்தால், ரூ.1 கோடி கிடைக்கும். இதற்கு நீங்கள் அக்ரசிவ் ஈக்விட்டி ஃபண்டு களில் முதலீடு செய்து வருவது அவசியம்.
இந்த அளவுக்கு ரிஸ்க் வேண்டாம் எனில், அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அந்த ஃபண்டுகள் நீண்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 12% வருமானம் தரும்பட்சத்தில் உங்களின் முதலீட்டுத் தொகை ரூ.5,000 என்பதற்குப் பதிலாக, ரூ.10,000 என இரு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.
மேலும், ஆரம்பத்தில் குறைவாக எஸ்.ஐ.பி தொகை இருந்தாலும், சம்பளம் கூடும்போது அந்தத் தொகையை அதிகரித்து வந்தால், இலக்கு தொகையான ரூ.1 கோடியை விரைவிலேயே அடைந்துவிடலாம்.”