இரு வீட்டுக்கு வீட்டுக்கடன் மான்யம்?
கணவன், மனைவி இருவரும் தனித்தனியே இரு வீடுகளை வீட்டுக்கடன் மூலம் வாங்கும் நிலையில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் இரண்டு வீடுகளுக்கும் மானியம் கிடைக்குமா என சிலருக்கு சந்தேகம் உள்ளது.
“பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக வீடு வாங்குபவர்களுக்கும், வீடு கட்டுபவர்களுக்கும் மானிய உதவி மத்திய அரசு வழங்குகிறது. இதில் முக்கியமான விதிமுறையாக மானியத்தைப் பெறுபவருக்கோ, மானியத்தைப் பெறுபவரின் குடும்ப உறுப்பினர்களுக்கோ இந்தியாவில் வேறு எங்கும் வீடு இருக்கக் கூடாது என்ற விதிமுறை இருக்கிறது.
ஆதலால் இரண்டு வீடுகளுக்கு மானிய உதவி பெறுவது என்பது சாத்தியமில்லை என்பது அறியவேண்டிய விஷயம்.