மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்த திட்டம்!
மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்த திட்டம்!
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, எதிர்வரும் ஜனவரி மாதத்தில் தனது மாடல் கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கவும், பணவீக்கம் அழுத்தங்களால் ஏற்படும் மூலதன செலவினங்கள் அதிகரிப்பின் பாதிப்பை ஒரளவு ஈடுகட்டவும் அடுத்த மாதம் வாகனங்களின் விலையை உயர்த்த போவதாக மாருதி சுசுகி இந்தியா தெரிவித்துள்ளது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தை பின்பற்றி மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.