இல்லத்தரசிகளுக்கு ஒரு நற்செய்தி.. கேஸ் சிலிண்டருக்கு 1000 ரூபாய் கேஷ்பேக்…
சமையல் கேஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டு பட்ஜெட்டில் கேஸ் சிலிண்டருக்கு என்று ஒரு தொகையை ஒதுக்கி விட்டு மற்ற செலவினங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் குடும்ப தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய கேஸ் சிலிண்டர் வாங்கினால் ரூ. 1000 மிச்சமாகும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு நீங்கள் கேஸ் ஏஜென்சிகளை தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் Paytm ஆப் இருந்தால், அதன் மூலம் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம். Paytm மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்வதன் மூலம் பெரிய பலனை நீங்கள் பெறலாம். Paytm மூலம் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் ரூ.1000 வரை கேஷ்பேக் பெறலாம்.
நீங்கள் Paytm செயலியில் 4 கேஷ் பேக் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், நீங்கள் ரூ.5 முதல் ரூ.1000 வரை கேஷ்பேக் பெறுவீர்கள். இதற்கு, நீங்கள் GAS1000 என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.
இதில், வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை கேஷ் பேக் கிடைக்கும்.
>> முதலில் நீங்கள் Paytm செயலிக்கு செல்ல வேண்டும்.
>> இப்போது ’புக் கேஸ் சிலிண்டர்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
>> இதற்குப் பிறகு எரிவாயு வழங்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
>> நீங்கள் Bharatgas, HP Gas, Indane எதுவாக இருந்தாலும் உங்கள் ஆப்சனை தேர்ந்தெடுக்கலாம்.
>> இப்போது நீங்கள் LPG ஐடி அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
>> அடுத்து Proceed என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
>> இப்போது நீங்கள் Apply Promocode என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
>> இங்கே நீங்கள் உங்களுக்கான சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
>> விளம்பர குறியீட்டை உள்ளிட்ட பிறகு, நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இப்போது உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும்.
பேடிஎம் மட்டுமல்லாமல் போன்பே போன்ற பல்வேறு மொபைல் ஆப்களில் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கான வசதி உள்ளது. இதில் இதுபோன்ற கேஷ் பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்யும் போது இதுபோன்ற நிறைய சலுகைகளை நீங்கள் பெற முடியும்