ரிலாக்ஸ் பண்ண திருச்சியில் ஒரு ரிசார்ட்
காலை கண் விழித்து எழுந்தவுடன் தொடங் கிய வேலை இரவு தொடங்கிய பின்னும் குடும்பம், குழந்தைகள், தனி மனித வாழ்க்கையில் உள்ள ஆசா பாசங்களை துறந்து, சந்தோஷங்களை அனுபவிக்க நேரமின்றி அலுவலக வேலை, அயரா உழைப்பு, வியாபாரம், வர்த்தகம் என்ற தொடர் ஓட்டத்தில் பயணப்பட வேண்டியிருக்கின்றன.
இயந்திரமாக இருந்தாலும் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்தால் ஒரு நாள் அது தானாக நின்றுவிடும். அது போல் தான் மனித உடலும். உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் அலைச்சலற்ற ஓய்வு தேவை. பெருத்த சிந்தனையற்ற ஓய்வு தான் மறுபடியும் சுறுசுறுப்பான பயணத்தை மேற்கொள்ள உதவுகின்றன.
இன்றைய மனிதர்களின் ஓய்வின் நேரத்தை கூட செல்போன் தின்றுவிடுகிறது. என்றாவது, எங்காவது ஒரிருநாள் ஓய்வெடுக்க மாட்டோமா என மனமும் உடலும் ஏங்கும். அத்தகைய மனிதர்களுக்கு ஓர் சிறந்த இடம் ஒன்று திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், சத்திரப்பட்டி அருகில் (சிவானி கல்லூரி அருகில்) விஜயநகரத்தில் அமைந்துள்ளது கிங் ரிஜன்ட் ரிசார்ட்.
திருச்சியிலிருந்து 10 நிமிட பயண தொலைவில், 24 மணி நேர போக்குவரத்து வசதி கொண்ட இந்த கிங் ரிசார்டானது நவீன கட்டமைப்பு, குளிர்சாதன அறை, எல்இடி டிவி, குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு மைதானம், சுத்தமான குடிநீர், விரும்பியதை சமைத்து சாப்பிட சமையல் பணியாளர்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளும் இடம், நடைப் பயிற்சிக்கான இடம், திறந்தவெளி அரங்கு, இயற்கைச் சூழல், பாதுகாப்பு வசதிகளோடு, சிசிடிவி கேமரா வசதி, 24 மணி நேர செக்யூரிட்டி வசதி, தடையற்ற மின்சாரம் என ஏராளமான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. “அமைதியாக நேரத்தைக் கழிக்க, குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியோடு, உரையாட ஏற்ற இடமாக உள்ள கிங் ரிசார்ட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு வைஃபை வசதி கிடையாது” என சிரிக்கிறார் இதன் உரிமையாளர் ராஜ்குமார்.
திருச்சி, வயலூர் செல்லும் சாலையில், வாசன் நகரில், “கிங் இன்டர்நேஷனல் ஸ்கூல்“ என்ற பள்ளியை நடத்தி வரும் ராஜ்குமார் ரிசார்ட் குறித்து மேலும் நம்மிடம் கூறுகையில், ”குடும்பங்களோடு செலவு செய்ய வேண்டியும், மன அழுத்தத்தை போக்க வேண்டியுமே மக்கள் ரிசார்டை தேடி வருகின்றனர். இதில் அவர்களுக்கு வைஃபையை வசதி செய்து கொடுத்தால் இங்கும் அவர்கள் அமைதியாக நேரத்தை கழிக்க முடியாது என்பதால் ரிசார்ட்டில் வைஃபை வசதி தவிர்த்திருக்கிறோம்.
கல்லூரி மாணவர்களின் கொண்டாட்ட தலமாக எங்களது ரிசார்ட் விளங்குகிறது.
கலை நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டங்களை மாணவர்கள் இங்கு கொண்டாடி மகிழ்கின்றனர். எங்கள் ரிசார்ட்டிற்கு வந்து சென்றவர்கள் எங்களது வெப்சைடில் 5 ஸ்டார் அளித்து செல்கின்றனர். இதனால் ரேட்டிங்கில் 5 ஸ்டார் அந்தஸ்துடன் திருச்சியில் முன்னணி ரிசார்ட்டாக விளங்குகிறது கிங் ரிஜன்ட் ரிசார்ட்” என்றார். ரிசார்ட்டில் உங்கள் நேரத்தில் சந்தோஷமாய் கழிக்க ஆன்லைன் மூலமும் புக் செய்யலாம். ரிசார்ட் குறித்து மேலும் தகவலறிய 97861 72000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.