வெயிலை வைத்தும் சம்பாதிக்கலாம்
கோடை காலத்தில் வீட்டிற்குள் வெப்பத்தின் தாக்கம் ஆரம்பித்துவிடும். வீட்டில் ஃபேன் போட்டாலும் வெப்பமான காற்றுதான் வரும். எனவே வீட்டின் மேற்தளத்தில் சம்மர்கூல் பெயின்ட் பூசுவதால் வெப்பகாற்றின் தாக்கம் குறையும். வீடும் குளுமை பெறும்.
சம்மர்கூல் பெயிண்ட்கள் கான்கிரீட், ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் சீட்டுகள், உலோக தகட்டிலான மேற்கூரைகள், பைபர்சீட், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி ஆகியவற்றிலும் பூசலாம். வேலையில்லா இளைஞர்கள் சம்மர்கூல் பெயிண்ட் டீலராவதன் மூலம் தினமும் ரூ.ஆயிரம் சம்பாதிக்க முடியும். பகுதிநேர தொழிலாகவும் இதை செய்யமுடியும். பெயிண்டர்களை வைத்து பூசிக்கொடுத்தும் சம்பாதிக்கலாம்.