Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சாம்பார் வைக்கும் நேரத்திற்குள் கண் அறுவை சிகிச்சை..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சாம்பார் வைக்கும் நேரத்திற்குள் கண் அறுவை சிகிச்சை..!
நவீன தொழில்நுட்பத்தின் நாயகனாக மருத்துவர் சிபுவர்கி..!

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டது சிபு வர்கியின் குடும்பம். பெற்றோர்கள் அந்தமானில் பணியாற்றிய போது (அரசுப் பணி) பிறந்தவர் சிபு வர்கி. உடன்பிறந்தோரில் நால்வர் மருத்துவர்கள், ஒருவர் ஆசிரியர்.
எதிர்காலத்தில் நாம் மருத்துவராக வேண்டும் என தனது 6வது வயதிலேயே தொலைநோக்கு பார்வையுடன் தீர்மானித்து மருத்துவம் பயின்ற மருத்துவர் சிபுவர்கியால் இன்று கண் பார்வை பாதிக்கப்பட்ட, திருச்சி யை சுற்றியுள்ள ஏராளமான மக்கள், தெளிவான பார்வையுடன் உலகத்தை காண்கிறார்கள்.
மருத்துவத்துறை பல எண்ணிலடங்கா விசித்திரங்களை கொண்டது. இன்றைய சமூகம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தாலும் அத்தனைக்கும் தீர்வை தேடி பயணித்துக் கொண்டே இருக்கிறது மருத்துவத்துறை.
ஒவ்வொரு நாளும், பொழுதும் பல சாதனைகளை, விசித்திரங்களை சந்தித்து வரும் மருத்துவத்துறையில் தன்னுடைய பங்கையும் நிலை நிறுத்தியிருக்கிறார் திருச்சி, வாசன் ஐ கேர் மருத்துவமனையின், கண் மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் சிபு வர்கி. ஒரு அறுவை சிகிச்சை முடித்த பின் ஓ.பி.யில் அமர்ந்திருந்த நோயாளிகளை விசாரித்துவிட்டு பின்னர் நம்மிடம் பேசத் தொடங்கினார்.
“ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்ததா..? என்ற நம் கேள்விக்கு “அது என்ன சாம்பார் வைக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது” என்றார் சிரித்துக் கொண்டே.
கண் அறுவை சிகிச்சை முடிந்து ஓரிரு நாள் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்த பின் தான் டிஸ்சார்ஜ் செய்வார்கள் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது அறுவை சிகிச்சை முடிந்த ஐந்து நிமிடத்தில் டிஸ்சார்ஜ்..!
அது மட்டுமல்ல. அறுவை சிகிச்சை செய்யும் போது தூக்க மருந்துகள் உபயோகிப்பது கிடையாது, சில நோயாளிகளை மட்டுமே தூங்க வைத்து அறுவை சிகிச்சை செய்கிறார் மருத்துவர் சிபு வர்கி. பெரும்பாலோரிடம் பேசிக் கொண்டும், பாட்டு பாட சொல்லிக் கேட்டுக் கொண்டும், ஜோக் அடித்துக் கொண்டும் செயல்படுகிறார்.
மருத்துவத்துறையில் இருக்கக் கூடிய அதிநவீன மருத்துவ முறைகள் அனைத்தும் வாசன் ஐ கேர் மருத்துவமனையில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் அறிமுகமான சினர்ஜி சிகிச்சை முறையினை ஒரு மாதத்திற்குள் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது வாசன் ஐ கேர் மருத்துவ மனை.!   லேசர் அறுவை சிகிச்சை, மர்போகல் அறுவை சிகிச்சை, சினர்ஜி சிகிச்சை என, நவீன முறை சிகிச்சை அனைத்தையும்  எளிமையாக கையாள்கிறார் மருத்துவர் சிபுவர்கி. கருவிழி மாற்று அறுவை சிகிச்சையையும் திறம்படச் செய்து வருகிறார்.
ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி.. மறுபுறம் அனுபவம்..! 25 ஆண்டுகால மருத்துவ பணியில் இதுநாள் வரை 1.10 லட்சத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு இருக்கிறார் என்ற தகவல் நம்மை திகைக்க வைக்கிறது.
1.10 லட்சமா..! பெரும் ஆச்சர்யத்துடன் உற்று நோக்கினோம்..! “மருத்துவத் துறையில் எனக்கு இருக்கக் கூடிய ஆர்வமே என்னை ஒவ்வொரு நாளும் இயக்கிக் கொண்டிருக்கிறது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோரை சந்திக்கிறேன். ஒரு நாளில் 10 முதல் 15 அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கிறேன். சில நாட்களில் 25 நபர்களுக்கு கூட  அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன்.  தினமும் கண்ணாடி அணிவதற்கான பிரச்சனைக்காக 60% சதவீதத்தினரும் கண்புரை அறுவை சிகிச்சைகென 20 சதவீதத்தினரும் நீரழிவு நோய் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை சரி செய்ய 10% சதவீதத்தினரும் வாசன் கண் மருத்துவமனையை அணுகுகின்றனர். இவ்வாறு வருபவர்களில் 95 சதவீதம் பேரை முழுமையாக குணப்படுத்தும் அளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் வாசன் ஐ கேர் மருத்துவமனையில் வளர்ந்திருக்கிறது,  கண் சிகிச்சைக்கு தினமும் ஆண், பெண், குழந்தைகள் என அறுபதிற்கும் குறையாமல் வருகின்றனர். தற்போது கண் சிகிச்சைக்கென குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது மிகவும் மன வேதனையை தருகிறது.
மருத்துவத் துறையில் கசப்பான, இனிப்பான சம்பவங்கள் என்பது மாறி மாறி நடந்து கொண்டே தான் இருக்கின்றன. முன்பெல்லாம் மருத்துவர்களை கடவுளாக பார்த்தார்கள். இன்று நண்பராகக் கூட பார்ப்பதில்லை, காரணம் பணம்..! கட்டண சிகிச்சையோ, இலவச சிகிச்சையோ எதுவானாலும் மருத்துவர்கள் ஒரே மனதுடன், தரத்துடன் சிகிச்சை வழங்க வேண்டும். வேறுபாடு காட்டுவதாலேயே மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்குமான உறவுகள் அற்றுப் போகின்றன. நாங்கள் கொடுக்கும் பணத்திற்கு நீங்கள் வேலை செய்கிறீர்கள்.. என்ற உணர்வுடன் தான் அணுகுகிறார்கள். அது சில நேரங்களில் நம் மனதை பாதிக்கச் செய்கிறது.
கூலித்தொழில் செய்து வந்த பெற்றோர், கண் பார்வை பாதிக்கப்பட்ட தனது பெண் குழந்தையை தூக்கி வந்தனர். குழந்தையை பரிசோதித்த போது அதன் இரண்டு கண்ணிலும் புற்றுநோய் தாக்கி, அதன் காரணமாக குழந்தையின் மூளை நரம்புகளையும் பாதித்திருந்தது கண்டு அதிர்ச்சி யுற்றேன். அந்த குழந்தை உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பு இல்லை என அறிந்து அதை அந்த பெற்றோரிடம் சொல்லவே தயங்கினேன். குழந்தை யின் இறுதிக்கட்ட நெருங்கிக் கொண்டிருந்தது.
ஒரு மருத்துவரால் நான் அந்த தகவலை மறைக்க முடியாது.  ஒரு வழியாக என் மனதை தேற்றிக் கொண்டு குழந்தையின் பெற்றோரிடம் தகவலை  கூறினேன். அவர்கள் கதறி அழுதார்கள், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, சிறு குழந்தை எளிய குடும்பம் அனைத்தும் கைமீறிப் போய்விட்டது. அந்த நிகழ்வு பல நேரங்களில்  என் நினைவிற்குள் வந்து என்னை வெகுவாக பாதித்தது.
திண்டுக்கல் அருகே விவசாயி ஒருவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது எருக்கம்பால் கண்ணில்பட்டு கண் பார்வை பறி போனது.
பார்வையின்றி 5 வருடத்தை கடந்தவர் ஒரு நாள் என்னை வந்து சந்தித்தார். கண்ணை பரிசோதித்து பார்த்தேன். கண் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே வழி என்று கூறி அவருக்கு கண் மாற்று அறுவை சிகிச்சை செய்தோம். இன்று மாதத்திற்கு ஒரு முறை அவர் பரிசோதனைக்கு வரும் போது எனக்கு பலாப்பழம், கடலை போன்றவற்றை எடுத்து வந்து கொடுப்பார். அந்த அன்பு என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் போது அவர்களின் முகத்தில் காணும் மகிழ்ச்சி நம் வாழ்க்கைக்கான அடையாளமாக தெரிகிறது. ஒரு மருத்துவராக இதைவிட பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்கப் போகிறது.!
நடுப் பார்வையால் யாருக்கு பாதிப்பு?
சினர்ஜி சிகிச்சை என்பது தூரப்பார்வை, கிட்டப்பார்வை மட்டுமல்லாமல்லாது நடுப் பார்வையையும் கிடைக்க வழி செய்கிறது. அது என்ன நடுப் பார்வை..?  இன்றைய தலைமுறையிடம் அதிகம் காணப்படக் கூடிய மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது நடுப்பார்வை. கணினி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் உபயோகிப்போர் நடுப் பார்வை குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆன்லைன் வகுப்பு, வீடியோ கேம் உபயோகம் போன்றவற்றால் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. கண் தசைகள் பாதிக்கப்படுகின்றன, முதலில் ஓடியாடி விளையாடுவார்கள். அதன் மூலம் கண் விழி, தசை கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்று மாறி மாறி செயல்படும். இதனால் கண் தசைகள் வலுப்பெறும், ஆனால் தற்போது வெறும் வீடியோ கேமை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பதால் குழந்தைகளின் பார்வை பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது, அவர்களுக்கு சினர்ஜி முறை பயனுள்ளதாக இருக்கிறது. மருத்துவ கல்வி முறையும் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.
சிமோசீன் என்ற சிகிச்சை முறை அதிநவீன சிகிச்சை முறையாகவும், இது சாஃப்ட்வேர் மூலம் மனித கண்ணை இயக்குவதை போலவே இருக்கும், இச்சிகிச்சை முறையினை மருத்துவத்துறை பின்பற்ற வேண்டும். மருத்துவ மாணவர்கள் இதில் பயிற்சி பெற்றால் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்கள் தமிழகத்திற்கு கிடைப்பார்கள் என்று சொல்லலாம்” என்கிறார் மருத்துவர் சிபுவர்கி.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.