Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தலைமைப் பண்பை வளர்க்கும் (JCI – JUNIOR CHAMBER INTERNATIONAL)

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தலைமைப் பண்பை வளர்க்கும் (JCI – JUNIOR CHAMBER INTERNATIONAL)

தனிமனித மேம்பாட்டிற்கும், தொழில் விரிவாக்கத்திற்கும், சேவை செய்வதற்கும் என உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இவையனைத்திலும், சமூகத்தில் அந்தஸ்தான ஒரு இடத்திற்கு சென்ற பிறகே இணைய முடியும்.

ஆனால், அந்த சமூக அந்தஸ்தை பெற என்ன வழி என்று கேட்டால், அதற்கான பதில் உரிய நேரத்தில் கிடைக்காமலேயே இருக்கும். அந்த பதிலை உங்கள் வாழ்க்கையில் நடத்திக் காட்டுவதையே கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஜெ.சி.ஐ. (JCI – JUNIOR CHAMBER INTERNATIONAL) அமைப்பு.

சாதாரண கிராம பின்னனி கொண்ட இளைஞர்கள் கூட உலக அரங்கில் தன்னுடைய தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள ஜெ.சி.ஐ. அமைப்பு உதவுகிறது. ஜெ.சி.ஐ இளைஞர்களின் தனித்திறனை கண்டறிந்து அவர்களை அத்துறையில் சிறந்த வல்லுனர்களாக மாற்றுவதை நோக்கமாகவும், இலக்காகவும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பா.சாலைக்குமரன்
இயக்குனர் (நிகழ்ச்சிகள்)
ஜேசிஐ 23வது மண்டலம்

ஜெ.சி.ஐ.-யின் வரலாறு:
சிறந்த தலைமைப் பண்பை இளைஞர்களிடம் வளர்க்கும் நோக்கத்துடன் ஜனநாயக நாட்டின் தேர்தல் கட்டமைப்பை கொண்ட ஜெ.சி.ஐ. என்ற அமைப்பை ஹென்றி கிஸ்சன்பியர் (HENRY GIESSENBIER) எனும் நபர் யூனைடெட் ஸ்டேஸ்சில் (USA)ஒரு மாகாணமான மிசோரியில் (MISAOURI) 13 அக்டோபர் 1915ம் ஆண்டு தொடங்கினார். சொற்ப உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பானது, தொடர்ந்து திறன்பட செயலாற்றி உலகளவில் பெறும் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. அதன் பலனாக, தற்போது, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,00,000த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஜெ.சி.ஐ..

இந்தியாவில் ஜெ.சி.ஐ..!
1949ம் ஆண்டு ஜெ.சி.ஐ. இந்தியாவில் அடி எடுத்து வைத்தது. ஒரு கிளையுடன் தொடங்கப்பட்ட ஜெ.சி.ஐ. தற்போது, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 1200 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. நிர்வாக வசதிக்காக இவை 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், திருச்சி, கடலூர், கும்பகோணம், காரைக்கால், நெய்வேலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 57 கிளைகளை கொண்டுள்ளது ஜெ.சி.ஐ.ன் 23வது மண்டலம்.

நிர்வாக மேலாண்மைக்கான பயிற்சி பட்டறை

தலைமைப் பண்பை வளர்க்க உதவும் ஜெ.சி.ஐ….
பிற அமைப்புகள் போன்று இல்லாமல் ஜெ.சி.ஐ. ஒவ்வொரு உறுப்பினருக் குமான மதிப்பை வழங்குகிறது. 5 விதங்களில் தொலை நோக்கு சிந்தனை யுடன் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் உறுப்பினர்களை பங்கேற்கச் செய்து அவர்களின் கூச்ச சுபாவத்தை போக்கச் செய்து நாளுக்கு நாள் அவர்களை பட்டைத் தீட்டி சிறந்த தலைமைப் பண்பு கொண்ட இளம் தலைவர்களாக மாற்றுகிறது.

சுயமேம்பாட்டு வாய்ப்புகள் (INDIVIDUAL OPPORTUNITITES)
உலகளவில் தன்னாலும் போட்டி போட இயலும் என்ற எண்ணத்தை, சுயத்திறனை வெளிக் கொண்டு வரும் விதமாக தலைமை பண்பின் முக்கியத்துவம், பேச்சு திறன் மேம்பாட்டின் அவசியம், இலக்கை நிர்ணயிப்பத்தின் தேவை குறித்தான கருத்தரங்கம் நடத்துவது.

நிர்வாக மேம்பாட்டு வாய்ப்புகள் (MANAGEMENT OPPORTUNITIES)

தாங்கள் நடத்தும் அல்லது பணிபுரியும் நிறுவனத்தில் நிர்வாக ரிதியாக திறன்பட செயலாற்ற உதவுகிறது. நிர்வாக ஆவணங்களை முறைப்படுத்துதல், பணியாளர்களின் வளர்ச்சி, கணக்கு வழக்குகளை கையாளுதல், மக்கள் தொடர்பின் முக்கியத்துவம், கலந்துரையாடல் நடத்துதல், விருதுகளின் பட்டியல் தயார் செய்தல், வேலைக்கு தேவையான நபர்களை தேர்வு செய்வது, செய்தி அறிக்கை தயார் செய்வது, செலவினங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாகம் சார்ந்த அனைத்து நுட்பமான விஷயங்களையும் கலந்துரையாடல் வாயிலாக தெளிவான பார்வையை காட்டுகின்றன. சில சமயங்களில் குடும்ப வழிகாட்டுதலுக்கும் இவை பயன்படும் விதமாக அமைகிறது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை

சமூகத்துடன் பழகும் வாய்ப்பு (COMMUNITY OPPORTUNITIES)
நம்முடைய சுற்றுப்புறத்தில், தன் வாழ்வியல் சார்ந்த நபர்களுடனான தொடர் பை அதிகரிக்கவும், அவர்களுடைய சமூகம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. தன்னுடைய பகுதியிலோ அல்லது தொழில் சார்ந்தோ உள்ள முக்கியமான நபர்களுடன் பயணிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். நிர்வாக முன்னேற்றம் மட்டுமின்றி தனிப்பட்ட நபர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் பாலமாக இருக்க முடியும். இந்த நிகழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

வெளிநாட்டு தொடர்புக்கான வாய்ப்பு (INTERNATIONAL OPPORTUNITIES)
நேரடியாக கள அனுபவம் பெற்ற நபர்களின் தொடர்பை ஏற்படுத்தி அதன் மூலம், உலக அளவில் நடைபெறக் கூடிய நிகழ்வுகளை அறிந்து கொள்ள இந்த பகுதி பெரும் உதவிகரமாக அமையும். இதன் மூலம் உலகின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பற்றி புரிதல் ஏற்பட உதவுகின்றது. எல்லைகள் இல்லாத, உலகளவில் நட்பின் எல்லைகளை விரிவுபடுத்த இந்த தளம் உதவுகிறது.

தொழில் மேம்பாட்டு வாய்ப்பு (BUSINESS OPPORTUNITIES)
ஜெ.சி.ஐ.யில் இணையும் பல்வேறு தொழில்சார்ந்த உரிமையாளர்கள் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் தொழில் சார்ந்த அறிவும் வாய்ப்புகளும் அதிகப்படுகின்றன. அது மட்டுமின்றி உறுப்பினர் அல்லாத தொழில் உலகில் சாதித்து நிற்கும் பலரையும் வைத்து கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்வுகள் நடத்தி இளைஞர்கள் மத்தியில் ஊக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. தங்களின் தொழிலை வெளிநாடுகளிலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

ஜெ.சி.ஐ.யின் கட்டமைப்பு
ஜெ.சி.ஐ. தனிப்பட்ட ஒரு நபரின் பிடியில் செயல்படும் அமைப்பல்ல. தலைவர், துணை தலைவர்கள், செயலாளர், பொருளாளர், இயக்குநர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை கொண்டு சிறந்த கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஜனநாயக நாட்டில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது போலவே ஜெ.சி.ஐ.யிலும் தேர்தல் நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த பொறுப்புகளுக்கு போட்டியிடலாம், உறுப்பினர்கள் பொறுப்பாளர்களை தேர்வு செய்வார்கள். இது உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஜெ.சி.ஐ. கிளையிலும் நடைபெறும். மண்டல பொறுப்பாளர்களை கிளைப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்வார்கள். தேசிய தலைவரை, கிளைத்தலைவர்கள் தேர்வு செய்வார்கள், உலக தலைவரை ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் தேர்வு செய்வார்கள்.

இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், ஒவ்வொரு பொறுப்பாளர்களின் பதவிக் காலமும் ஒரு ஆண்டுகள் மட்டுமே, பதவிக் காலம் முடிந்தவுடன் மீண்டும் தேர்தல் நடைபெறும். தேர்தலில் போட்டியிட 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் அவசியம்.

2020&ம் ஆண்டு திருச்சி ஜெ.சி.ஐ.யின் பங்களிப்பு

  •  மாணவர்களின் போட்டி தேர்வுக்கான திறனை வளர்க்கும் விதமான interview skills கருத்தரங்கு கார்த்திகேயா பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தியது.
  • எதிர்கால நம்பிக்கையை விதைக்கும் விதமாக மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக future என்ற கருத்தரங்கு நடத்தியது.
  • பள்ளி மாணவர்களின் நேர்மை பண்பை வளர்க்கும் அல்லது ஊக்குவிக்கும் விதமாக ஆளில்லாத இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கு உரிய பணத்தை வைத்து பொருளை எடுத்துக் கொள்ளும் விதமாக honesty shop என்ற நிகழ்வை SAS CBSE பள்ளியில் நடத்தப்பட்டது.
  •  SWAG – save water for another generation என்ற தலைப்பில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மத்தியில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
  • Third eye for business என்ற தலைப்பில் தொழில் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமான கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
  • பேச்சின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமான ஒரு நாள் Effective publics speaking என்ற WORKSHOP நடத்தப்பட்டது.
  • பெண்களை போற்றும் விதமான தொழில் துறையில் சாதித்துக் கொண்டிருக்கும் நபர்களை கொண்டு இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு நடப்பட்டது.
  • Marketing mantra என்ற தலைப்பில் இன்றைய தொழில் வாய்ப்புகளில் மார்கெட்டிங் முக்கியத்துவம் குறித்து விரிவாக விவாதிக்கும் கருத்தரங்கு இணைய வழியில் நடத்தப்பட்டது.

இது மட்டுமின்றி, Skill development training, Women and Mental health, effective business networking, Money management, Social media business promotion, International plastic free day, No plastic, Remove your mask, Learn to earn, Skill blast, Scientific yoga, Creative thinking உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திறன்பட முடித்துக் காட்டியுள்ளனர் அப்போதைய ஜெ.சி.ஐ. திருச்சி கிளையின் தலைவர் திரு.பா.சாலைக்குமரன் தலைமையிலான குழுவினர். இவர், ஆத்மா மருத்துவமனையின் பொது மேலாளராக உள்ளார்.

ஜெ.சி.ஐ.க்கு திருச்சி மண்டல அளவில் சிறந்த கிளை விருது உட்பட 8 விருதுகளையும், தேசிய அளவில்“NATIONAL PRESIDENT EXCELLENCE AWARD” உட்பட 12 விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளார். தற்போது, 23வது மண்டல நிகழ்ச்சி இயக்குநராக உள்ளார். 2021ம் ஆண்டு ஜெ.சி.ஐ. திருச்சி கிளையின் தலைவராக ஆர்.கல்யாணராமன் பதவியேற்றுள்ளார்.

மண்டல கருத்தரங்கம், தேசிய கருத்தரங்கம், உலக கருத்தரங்கம் என வருடாவருடம் ஜெ.சி.ஐ. உறுப்பினர்களுக்கு கருத்தரங்கங்கள் நடத்தப்படும். இதில் திறன்களை வளர்க்கும் விதமாக கருத்தரங்கத்தின் தலைப்பு அமைந்திடும். இன்று உலகளவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவன அமைப்புகள், அரசு நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாக மற்றும் பயிற்சியாளர்களாக ஜெ.சி.ஐ. உறுப்பினர்களே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற ஜெ.சி.ஐ.யின் தொடர் செயல்பாடுகளால் கல்லூரி மாணவர்கள், தொழில் நடத்துபவர்கள், தனியார் மற்றும் அரசு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் என பலரும் இணைந்து வருகின்றனர். இளைஞர்களின் தலைமைப் பண்பு, சுயமேம்பாட்டு திறனை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் ஜெ.சி.ஐ. யில், வாக்களிக்கும் வயதை எட்டியவர்கள் முதல் யாரும் உறுப்பினராக இணையலாம்.

தொடர்புக்கு : 9600574654.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.