ரூபாய் 1000-த்தில் தொடங்கி கோடியில் சக்கை போடும் தொழில்..!
நாம் செய்யும் தொழில் சமூகத்தின் மத்தியில் கௌரவமாக இருக்க வேண்டம் என்று நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது. எந்த தொழிலாக இருந்தாலும் சரி அவற்றை உங்கள் மன விருப்பத்துடன் தன்னம்பிக்கையாக இருந்தால் நீங்கள் செய்கிறான் என்ன தொழிலாக இருந்தாலும் சரி அவற்றில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
இஸ்திரி தொழில் என்றவுடன் தெரு ஓரங்களிலோ அல்லது சாலை ஓரங்களிலோ செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் இல்லை உங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை செய்யலாம். வெறும் 1000 ரூபாய் வைத்து எல்லாம் இந்த தொழிலை செய்து முன்னேறியவர்கள் கூட இருக்கின்றன. சரி வாங்க குறைந்த முதலீட்டில் தினசரி லாபம் தரும் தொழிலை பற்றிய சில தகவல்களை நாம் இப்பொழுது தெளிவாக படித்தறியலாம் வாங்க.
இடவசதி: இந்த Ironing Business-ஐ தொடங்க உங்களுக்கு பத்துக்கு பத்து அளவு கொண்ட ஒரு சிறிய அரை இருந்தால் போதும். உங்கள் வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.
தேவைப்படும் மூல பொருட்கள்: Iron box இரண்டு அல்லது மூன்று, இரண்டு டேபிள், மின்சாரம் இவை மூன்றும் இருந்தால் போதும்.
தேவைப்படும் வேலை ஆட்கள்: நீங்கள் பெரிய நகர்ப்புறங்களில் வசித்து இந்த தொழிலை செய்கிறீர்கள் என்றால் தாராளமாக இரண்டு மூன்று வேலை ஆட்களை வைத்து இந்த தொழிலை செய்யலாம். இல்ல சிறிய நகர்ப்புறங்களில் தான் வசிக்கிறீர்கள் என்றால் ஒரே ஒரு வேலை ஆட்கள் இருந்தால் போதும்.
முதலீடு: ஆரம்பத்தில் இந்த தொழிலை தொடங்கும்போது டேபிள். இயந்திரம் இவையெல்லாம் வாங்க வேண்டும் என்பதினால் குறைந்ததும் ஒரு 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும்.
செலவு: இந்த தொழில் பொறுத்தவரை மின்சார செலவு தான் கொஞ்சம் அதிகமாக இருக்கும் மத்தபடி வேறு எந்த ஒரு செலவும் அதிகமாக இருக்காது.
சந்தை வாய்ப்பு: இப்போது உள்ள காலகட்டத்தில் வீட்டில் உள்ள ஆண், பெண் இருவருமே வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை ஓட்டை முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டோம். இதன் அலுவலகங்கள், பெரிய பெரிய நிறுவங்கள் போன்றவற்றில் பணிபுரிய செல்கின்றன. அவ்வாறு செல்லும் போது அவர்களது உடைகளை சரியாக அயன் செய்து நீட்டாக வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றன. மேலும் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் வந்தாலும் அவர்களது உடைகளை இஸ்திரி செய்வார்கள், பள்ளி குழந்த்தைகளின் ஸ்கூல் யுனிபார்ம், கல்லூரி மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள் என்று பலரும் தினமும் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றன. இதன் காரணமாகவே அவர்களது உடைகளை அயர்ன் செய்து உடுத்திக்கொள்கின்றன.
இருப்பினும் அனைவருக்குமே வீட்டில் அவர்களது உடைகளை அயர்ன் செய்ய நேரம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் கடைகளில் கொடுத்து தான் அவர்களது உடைகளை அயர்ன் செய்து கொள்கின்றன. ஆகவே நீங்கள் இந்த தொழிலை செய்வதன் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பையும். நல்ல வருமானத்தையும் பெற முடியும். ஆகவே நீங்கள் வாடிக்கையாளர்களை உங்கள் வசம் இழுக்க முதலில் நன்றாக விளம்பரம் செய்ய வேண்டும். இதற்கு நிறைய வழிகள் இப்பொழுது இருக்கிறது அதாவது பிளக்ஸ் வைக்கலாம், சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யலாம். வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று துணிகளை வாங்கி அயர்ன் செய்து கொடுக்கலாம் இதன் மூலம் நிறைய வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.
லாபம்: லாபம் பொறுத்தவரை தனி நபராக ஒரு நாளைக்கி நீங்கள் 100 துணிகளை அயர்ன் செஞ்சீங்க அப்படினாலே போதும் 1000 ரூபாய் சம்பாதிக்க முடியும். உங்களுக்கு இந்த தொழில் யோசனை பிடித்திருந்தால் உடனடியாக இந்த தொழிலை செய்ய ஆரம்பியுங்கள்