ரிலையன்ஸின் புதிய மார்க்கெட் யுத்தி
இந்தியாவில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் பல்வேறு கிளைகளுடன் பல வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இங்கு அத்தியாவசிய பொருட்கள் ஆன பால் முதல் அனைத்து மளிகைப்பொருட்கள், வீட்டு பராமரிப்புப் பொருட்கள், அலங்கார பொருட்கள் மற்றும் ஆடைகள் என வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கிகொள்ளும் படி அமைத்திருந்தது. ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ரிலையன்ஸ் ஸ்மார்ட், ஜியோ ஸ்மார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஜியோ ஸ்டோர் என பல்வேறு பெயர்களில் கிளைகளை ஆங்காங்கே திறந்து விற்பனையை மேம்படுத்த முயற்சித்தது. ஆனாலும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
இந்நிலையில், பொதுமக்களின் கவனம் உள்ளூர் பெயர் கொண்ட சூப்பர் மார்க்கெட்டிலே அதிகம் இருந்ததை கவனித்த ரிலையன்ஸ். பல்வேறு பெயர்களுடன் இயங்கிவந்த கிளைகளை தற்போது கோயம்புத்தூரில் வெற்றிகரமாக இயங்கிவந்த ஸ்ரீ கண்ணன் ஸ்மார்ட் சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில் மாற்றியது.
மேலும், தற்போது திருச்சி பொன்நகரில் புதிய கிளையும் ஸ்ரீ கண்ணன் ஸ்மார்ட் சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில் துவங்கியுள்ளது. தற்போது, சிறப்பு தள்ளுபடியாக ரூ. 2000-க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிலோ சர்க்கரை ரூ.9-க்கு வழங்கி வருகின்றது. மேலும், அனைத்து தினங்களிலும் குறைந்த பட்சம் 6% வரை தள்ளுபடியும் வழங்கி வருகிறது. உள்ளூர் சூப்பர்மார்க்கெட் பெயரில் புதிய வியாபார உத்தியுடன் இறங்கியுள்ளது ரிலையன்ஸ்.