செருப்பு தைக்கும் முதலாளி மாரிமுத்துவிடம் உரையாடல் –
செருப்பு தைக்கும் முதலாளி மாரிமுத்துவிடம் உரையாடல் –
ஈரோடு மாவட்டம் 1.சிவசண்முகவீதி மரப்பாளத்திற்கு சென்றால் செருப்பு தைக்கும் கடையும் பேக் தைக்கும் கடையும் வரிசையாக இருக்கும். அதில் செருப்பு தைக்கும் முதலாளி மாரிமுத்து என்பவரை சந்தித்தேன் அவருக்கு 52 வயது ஆகிறது எத்தனை வருடங்களாக இத்தொழில் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு 32 ஆண்டுகளாக இத்தொழிலில் தான் செய்கிறேன் என்று சொன்னார்.
அப்பா என்ன செய்தார் என்று கேட்டதற்கு அப்பா விவசாயி எனவும், பெரியப்பா சித்தப்பா, செருப்பு தைக்கும் வேலை தான் செய்தார்கள் எனவும் சொன்னார். உங்களுக்கு குறைவான வருமானம் தானே வரும் இதே நீங்கள் செருப்பு தைக்கும் ஷோரூமில் வேலை செய்தால் மாசம் பத்தாயிரம் சம்பளம் வருமே ஷோரூமில் சென்று வேலை பார்க்கலாமே என்று கேட்டேன் சிரித்துக் கொண்டே சொன்னார் நான் ஒரு நாளைக்கு 500 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரையும் சம்பாதிக்கிறேன் கடைக்கு நானே முதலாளி நானே தொழிலாளி என்று சட்டை காலரை தூக்கி விட்டு சொன்னார் .
நீங்கள் இருக்கிறது சொந்த வீடா என்று கேட்டதற்கு ஆமாம் அப்பா வீடு என்றார் ஜனங்களாம் முன்னாடி மாதிரி இப்போதும் செருப்பு தைக்க வருகிறார்களா இப்பல்லாம் நிறைய பெரிய கடைகள் வந்துடுச்சு வருவாங்களா என்று கேட்டதற்கு அது எல்லாம் வருவார்கள் ஆனால் நாய் கடி செருப்பு தான் அதிகமாக வருகிறது என்று சிரித்துக் கொண்டே சொன்னார். காலையில் 9:00 மணிக்கு வந்துவிட்டு மாலையில் 6:00 மணிக்கு வீட்டுக்கு போவாராம்.
உங்களிடம் பேரம் பேசுவார்களே அவர்களை எப்படி சமாளிப்பீர்கள் என்று கேட்டதற்கு குறைத்தால் பத்து ரூபாய் குறைப்பேன் பத்து ரூபா குறைத்தால் நான் ஒன்னும் குறைந்திட மாட்டேன் என்று சொன்னார் அந்த இடத்தில் மாரிமுத்தின் மனிதநேயம் வெளிப்பட்டது.
குடிப்பீர்களா என்று கேட்டதற்கு ஐயோ நான் குடிக்க மாட்டேன் பக்கத்தில் பேக் தைக்கும் நண்பனை கைகாட்டி அவன் தான் குடிப்பான் என்று சொன்னார் சொல்லிட்டு ஒரு நிமிடம் சிரித்துக்கொண்டே இருந்தார் நண்பனை மாட்டி விட்ட சந்தோஷத்தில்.
கல்யாணம் காது குத்து போன்ற விசேஷங்களுக்கு எல்லாம் நீங்க போவீர்களா, உங்கள் உறவினர்கள் எப்படி உங்களை அணுகுவார்கள் என்று கேட்டேன் அதற்கு மாரிமுத்து ரஜினி பட பானையில் கெத்தாக சொன்னார் வீடைத் தேடி வந்து அழைத்தால் போவேன் இல்லன்னா போக மாட்டேன் கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட் என்று சொல்லிவிட்டு உரையை முடித்துக் கொண்டார்.
_மு.வசீர் அகமத்