கோடைக்கு ஏற்ற சூப்பர் பிசினஸ் பணம் கொட்டும் இளநீர் கூழ்!
கோடைக்கு ஏற்ற சூப்பர் பிசினஸ் பணம் கொட்டும் இளநீர் கூழ்!
நமதுநாட்டில் வெளிநாட்டுக் குளிர்பானங்களை வாங்கி குடிக்காதவர்களே இல்லை என்று கூறலாம். ஜல்லிக்கட்டு பிரச்சனை, உணவில் கலப்படம், போன்று ஏதேனும் பிரச்சனைகள் வரும்போது நாம் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பதை உணர்த்தி மக்கள் மத்தியிலும், சமுக வலைத்தளங்களில் பல கருத்துக்களை பார்க்க முடியும்.
சரி, இளநீர் வாங்கி குடிக்கலாம் என்றால் இளநீர் கடையைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் கண் கட்டிவிடும். இயற்கையான இந்த இளநீரில் எந்த ரசாயன கலப்படமும் இல்லாமல் நாம் வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்ஷியம், இரும்பு சத்துடன் குளுக்கோஸ் போன்றவை கிடைக்கும்.
ஒலிம்பிக் விளையாட்டில் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் சத்தான பானங்களாக இளநீர் அளிக்கின்றனர். இப்படிப் பட்ட இளநீர் பாக்கெட்களில், பாட்டில்களில் எல்லாம் அடைத்து வைத்து விற்பனை செய்து வருவது மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.
இளநீரை கொள்முதல் செய்ய ஒரு டாடா ஏஸ் வாகனம் போதும். இந்த வாகனங்கள் மூலம் அருகில் உள்ள தென்னை தோப்புகளில் இருந்து தரத்திற்கு ஏற்றவாறு குறைந்தது 10 ரூபாய் ஒரு இளநீர் என்ற விலையில் கொள்முதல் செய்யலாம்.
இப்படிச் சேகரிக்கும் இளநீர்களை முதலில் துணியால் துடைத்துச் சுத்தம் செய்து அதனைக் கட்டர்கள் வைத்து வெட்டி நீரை மட்டும் தண்ணீர் கேன்களில் வடிகட்டி சுத்தமாகச் சேகரித்துக்கொள்ள வேண்டும். இப்படிஎடுக்கப்படும் இளநீர் மூன்று மணி நேரத்தில் பதப்படுத்தப்பட்டுப் பாட்டிலில் அடைக்கப்பட்டவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட வேண்டுமாம். இல்லை என்றால் இளநீரின் சுவை மாறிவிடும்.
இப்படி வடிகட்டப்பட்ட இளநீரில் குளுக்கோஸ் சேர்த்துக் கொள்வார். குளுக்கோஸ் எதற்காக என்றால் பல மரங்களில் இருந்துவெட்டப்பட்ட இளநீர் தேங்காய்களால் சுவை மாறிவிடும் என்றும், இதனைச் சமப்படுத்தவே குளுக்கோஸ் பின்னர் சுத்தமான பிறாண்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டில்களில் இளநீரைக் குறிப்பிட்ட அளவிற்கு நிரப்ப வேண்டும்.
இப்படி நிறப்பப்பட்ட பாட்டில்களில் அடுத்து மீதும் உள்ள அளவில் கார்பன் டை ஆக்சைடு நீரும் சேர்க்கப்படுகின்றது. இதனால் இளநீர் குளிர்பானத்தின் தன்மை மாறாமல் இருக்கும். இளநீர் தயாரிப்பு நிறுவனத்தின் பேரில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) நிறுவனத்தில்பதிவு செய்து சான்றிதழும் பெற வேண்டும்.
இளநீர் கூழ் பானத்தில் பிரசர் வேட்டிவ் ஏதும் சேர்க்க வேண்டியது இல்லை. இதை உருவாக்கும் பணி மற்றும் குளிர் சாதனப் பெட்டிகளில் வைத்து இதனை விற்பனை செய்வதால் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏதும் இல்லை. தினமும் இது போன்று 4000 முதல் 5000 பாட்டில்கள் வரை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யலாம். பொதுவாகக் குளிர்பானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 4 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே உற்பத்தி செலவு ஆகும். ஆனால் இளநீர் ஒன்றை குறைந்தது 10 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்வதால் உற்பத்தி விலை அதிகமாக இருக்கும்“.
இவை மட்டும் இல்லாமல் போக்குவரத்துச் செலவு, டிஸ்டிரி பியூட்டர்கள் மற்றும், விற்பனையாளர்களுக்கான கமிஷன் போன்றவையும் விலை அதிகமாக இருக்கக் காரணம். ஆனால் இயற்கையான பானம் என்பது ஒரு சிறப்பு.
இளநீர்கூழ் நான்கு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இளநீர் கூல் நிறுவனத்தால் தென்னை மரம் வளர்ப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நஷ்டம் இல்லாமல் விவசாயிகளும் பயன்பெறுவார்கள். இந்த தொழில் துவங்க திட்டம் இருந்தால் இவர்களிடம் தொடர்பு கொள்ளலாம்.. பைஜுஎன் டி, கௌப்ராடு இளநீர் திட்டம், டிவி புரம், வைக்கம், கோட்டயம் மாவட்டம். தொலைப்பேசி : 97471 50330