ஏலச்சீட்டு லாபகரமாக்கும் வழி
சீட்டு மூலம் சேமிப்பு என்பது எல்லாருக்கும் அதிக பயன் தரும் என்பதைவிட, உடனடியாகப் பணம் தேவைப்படுபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். உடனடிப் பணத்தேவை இருப்பவர்கள், கடனாக வட்டிக்கு பணம் வாங்கும்போது, வட்டியாக அதிக பணம் கட்ட வேண்டியிருக்கும்.
சீட்டுத் திட்டத்தில் வட்டியில்லாமல் நாம் பணம் பெற்றுக்கொள்ள முடியும். ஏலச்சீட்டை இறுதி மாதம் வரை காத்திருந்து பணம் எடுப்பவர்களுக்கு ஏலச்சீட்டு லாபகரமானது.
ஏலச்சீட்டைப் பொறுத்தவரை, சீட்டுப் பணத்தை எடுத்து நீங்கள் வேறு எதிலாவது முதலீடு செய்தால் நிச்சயம் லாபம்தான். சீட்டுப் பணத்தை பீரோவில் வைத்துப் பத்திரப்படுத்துவது, வங்கி எஃப்.டி-யில் போட்டு வைத்திருப்பது நஷ்டத்தையே தரும்!