திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ஆதார் சேவை மையம்…
திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள அஞ்சல் பிரிப்பகத்தில் இரவு நேர அஞ்சல் சேவைகள் சிறப்பாக விடிய விடிய நடைபெற்று வருகிறது. இச்சேவை பொதுமக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில், தற்போது ஆதார் பதிவு மற்றும் திருத்தம் மேற்கொள்வதில் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் விதமாக திருச்சி ரயில் நிலையத்தில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆதார் சேவை மையம் காலை 9 மணி முதல் மதி்யம் 2 மணி வரையிலும் மற்றும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படுகிறது. இங்கு பொதுமக்கள் டோக்கன் முறையில்லா சிரமில்லாத சேவையை பெறலாம்.
இங்கு புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்தம், இருப்பிடச்சான்றிதழில் முகவரி திருத்தம், பெயர் திருத்தம், மற்றும் பிறந்த தேதி மாற்றம் ஆகிய சேவைகளை பெறலாம்.
புதிய ஆதார் கார்டு பதிவிற்கும், குழந்தைகளுக்கான கைரேகை கருவிழி பதிவை புதுபித்தல் ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
மொபைல் எண் திருத்தம் மற்றும் அஞ்சல் எண் திருத்திற்க ரூ.50 வசூலிக்கப்படுகிறது.
பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் திருத்தம் ஆகியவற்றிக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
பெயர் திருத்ததிற்கு புகைப்படசான்று, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசாங்க அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் கொண்டு செல்ல வேண்டும்.
முகவரி திருத்ததிற்கு பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசாங்க அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஈ.பி. பில், டெலிபோன் பில், 3 மாதத்திற்கு உட்பட்ட கேஸ் பில், மற்றும் முந்தைய ஆண்டு வீட்டு வரி ரசீது ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
பிறந்த தேதி மாற்றத்திற்கு பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், பள்ளிச் சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.
தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரி மாற்ற எவ்வித ஆவணங்களும் தேவையில்லை.