இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் சொகுசுக்கார் – ஜெர்மன் நிறுவனம் அறிமுகம்
ஜொ்மனி சொகுசுக் கார் தயாரிப்பாளரான பிஎம்டபுள்யூ, முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஐ4 ரகக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மின்சார ஐ4 ரகக் கார்களின் அறிமுக விலை ரூ.69.9 லட்சம்
நிறுவனத்தின் 5-ஆவது தலைமுறை ‘இ-டிரைவ் தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் இந்தக் கார் 5.7 விநாடிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்துடன்கூடியது. மணிக்கு 80.7 கிலோவாட் சக்தி கொண்ட பேட்டரியில் இந்தக் கார் இயங்குகிறது. மேலும் 340 குதிரை சக்தியை கொண்டது இந்த மின்சார ஐ4 கார்கள்.