உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதானி குழுமம் ரூ,70,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி பேசுகையில்,
சுமார் 30,000 பேருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.70,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பசுமை ஆற்றல், விவசாயப் பொருள்களுக்கான போக்குவரத்து வணிகம் உள்ளிட்டவற்றில் ரூ.11,000 கோடியும், சாலை மற்றும் போக்குவரத்து கட்டுமானத்திற்கு ரூ.24,000 கோடியும், பாதுகாப்புத் துறைகளில் ரூ.35,000 கோடியும் முதலீடு செய்ய உள்ளோம்.
மேலும், கான்பூரில் தெற்காசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து வளாகத்தை அமைக்க உள்ளதாகவும் கௌதம் அதானி கூறினார்.