Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பத்திரிக்கைகளில் செய்யப்படும் விளம்பரம் செலவா, முதலீடா?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

“வாடிக்கையாளர்களுக்கு எளிதாக சென்று சேரும் விளம்பரங்களில் முதன்மையானது பத்திரிக்கை விளம்பரம் மட்டுமே. பத்திரிக்கையில் செய்யப்படும் விளம்பரம் என்பது செலவல்ல, வியாபாரத்தில் செய்யப்படும் முதலீடுகளில் ஒன்று என்பதை உணர்ந்தவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்” என்கிறார் விளம்பரத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்ற BE WELL ADS, விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் எம்.பார்த்தசாரதி.

சாதாரணமாக ஒரு கடை திறப்பதற்கு அதன் உரிமையாளர் ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து, நண்பர்கள், சுற்றத்தார்களுக்கு அழைப்பிதழ் தருவார்கள். அத்துடன் திறப்பு விழா நாளன்று ஒரு நாளிதழில் செய்யப்படும் விளம்பரம், அழைப்பிதழ் பெற்றவர்களுக்கு அந்நாளை நினைவுபடுத்துவதோடு, பலரின் பார்வைக்கும் ஒரே நேரத்தில் சென்று சேரும்.

நாளிதழ் வாங்குபவர்கள் எண்ணிக்கையைத் தாண்டி, டீக்கடை, சலூன் கடை போன்று பொது மக்கள் கூடும் இடங்களில், நாளிதழ்கள் மூலம் விளம்பரங்கள் பன்மடங்கு மக்களை சென்று சேர்கிறது.

சமூகத்தில் முக்கியஸ்தர்களாக கருதப்படும் நபர்களின் இறப்பினை தனித்தனியாக ஒருவர்க்கு தகவல் தருவது சிரமம். நாளிதழில் வெளியிடப்படும் கண்ணீர் அஞ்சலி விளம்பரங்கள் மூலம் குறைவான நேரத்தில், உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்கிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

காலையில் எழுந்தவுடன் காபியுடன் நாளிதழ் புரட்டா விட்டால் அன்றைய நாள் நிறைவு பெறாது என்பது தான் பெரும்பாலோரின் வழக்கமாக இன்றளவும் தொடர்கிறது. சொந்தமாக தொழில் செய்பவர்கள், காலையில் நாளிதழ் படித்து சந்தை நிலவரம் அறிந்த பின்பே தங்கள் தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள்.

பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்க நினைப்பவர்கள், எந்த பத்திரிக்கை முன்னணியில் உள்ளது என்பதை பார்த்து தருகிறார்கள். அது சரியான அணுகுமுறை அல்ல. ரியல் எஸ்டேட் விளம்பரம் யாரை சென்று சேர வேண்டும், வேலைவாய்ப்பு விளம்பரம் யாரை சென்று சேர வேண்டும். அதற்குரிய வாசகர்கள் எந்த பத்திரிக்கையினை வாங்கிப் படிக்கிறார்கள் என்பதை அறிந்து விளம்பரம் செய்தால் மட்டுமே, விளம்பர செலவு முழுமை பெறும். எங்கள் மூலம் தரும் போது, விளம்பரம் யாரைப் போய்ச் சேர வேண்டும் என்பதை அறிந்து, அதற்குரிய வாசகர்களை அதிகம் கொண்ட பத்திரிக்கை எது என்பதை அறிந்தே தருகிறோம்.

சொத்து விளம்பரம், பெயர் மாற்ற விளம்பரங்கள் என அனைத்தும் சட்ட ஆவணமாக கருதப்படுகின்றன. மேலும் அரசின் அறிவிப்புகள், ஒப்பந்த (TENDER ADVT) விளம்பரங்கள், அரசு மற்றும் தனியார் கார்ப்பரேட் விளம்பரங்கள் அனைத்தும் நாளிதழ்களில் மட்டுமே விளம்பரம் செய்யப்படுகிறது. இதன் மூலம் விளம்பரங்களில் நாளிதழின் முக்கியத்துவத்தை உணரலாம்.

விளம்பரங்கள் ஒரு இதழின் தரம் மற்றும் விற்பனையை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளன. விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே அந்நிறுவனம் உலகம் முழுக்க நடக்கும் செய்திகளை விரைந்து வாசகர்களுக்கு வழங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள உதவுகிறது.

பொதுவாக சிலர் நாளிதழ்களில் விளம்பரம் தராமல், உள்ளுக்குள் நோட்டீஸ் வைத்து தருகிறார்கள். அது பெரும் தவறான செயலாகும். பெரும்பாலும் அத்தகைய துண்டு பிரசுரங்களை வாசகர்கள் பொருட்படுத்துவதில்லை என்பதை நாளிதழ் விநியோகஸ்தர்கள் உணர வேண்டும்” என்றார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.