குறு, சிறு நிறுவனங்களுக்கு ஏஇஓ அந்தஸ்து..!
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்(சிபிஐசி) ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.
ஓராண்டுக்குள் 10 சுங்க ஆவணங்களை தாக்கல் செய்தவர்கள், அல்லது 2 ஆண்டுகளுக்கு மேல் அனைத்து ஆவணங்களை சரியாக தாக்கல் செய்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ‘‘தாராளமயமாக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார இயக்குனர் (ஏஇஓ) ’’ அந்தஸ்தினை வழங்க உள்ளது. விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் இந்த ஏஇஓ அந்தஸ்து வழங்கப்படும்.
இந்த அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுக்கு, சுங்க ஒப்புதல் விரைவாக கிடைக்கும். துறைமுகங்களுக்கு ஏற்றுமதி கன்டெய்னர்களை நேரடியாக கொண்டு செல்லலாம். சுங்க கட்டணத்தையும் தாமதமாக செலுத்தலாம்.
இது தவிர, வங்கி உத்தரவாதத்திலிருந்து விலக்கு, வரி தள்ளுபடி, ரீபண்ட் ஆகியவற்றில் முன்னுரிமை போன்ற சலுகைகளும் இந்த ஏஇஓ அந்தஸ்து பெற்ற குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.