செயலியில் கிடைக்கும் விவசாய கருவிகள்!
டிராக்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சோனாலிகா நிறுவனம் “சோனாலிகா வேளாண் தீர்வுகள்” (Sonalika Agro Solutions) என்ற பெயரில், மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
டிராக்டர், அறுவடை இயந்திரம், நடவு இயந்திரம் மற்றும் விவசாய பணிகளுக்கான இயந்திரங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் விவசாயிகளின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவை இந்த தகவல் தளத்தில் இருக்கும்.
இந்த செயலி மூலம் விவசாய இயந்திரங்கள், கருவிகள் வைத்திருப்போர் வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம். மேலும் இத்தகைய கருவிகளை இயக்கத் தெரிந்த தொழில்நுட்ப பணியாளர்களுக்குத் வேலை கிடைக்கவும் வாய்ப்பு உருவாகிறது.
இந்த மொபைல் அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் வாடகைக்கு கொடுத்திட, விவசாய கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வைத்திருப்போரும், விவசாய பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்களும் தங்களது பெயரை எந்தவித கட்டணமுமின்றி பதிவு செய்து கொள்ளலாம்.