வளர்ச்சியில் விவசாயத் துறை..!
2020-&-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா பாதிப்பால் நாட்டின் உற்பத்தி, சேவைத் துறை ஆகியவை பெரிய அளவில் பாதிப்பு அடைந்த நிலையில் இந்தியாவில் வளர்ச்சி அடைந்த ஒரே துறை விவசாயம் மட்டும் தான்.
முதல் காலாண்டில் கொரோனா முடக்கம் காரணமாக நாட்டின் உற்பத்தித் துறை 35.7 சதவீதம் சரிந்த நிலையில் 2வது காலாண்டில் 5.9 சதவீத அளவிலான சரிவை மட்டுமே சரிந்திருந்தது.
முதல் காலாண்டில் விவசாயத் துறை உற்பத்தி 3.4 சதவீதம் வளர்ச்சியில் இருந்தது. 2வது காலாண்டில் முதலீட்டாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் விவசாயத் துறையின் வளர்ச்சி அளவீடுகளைக் காண மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
சரியான பருவமழை, கூடுதலாக ரூ.65,000 கோடி அளவிலான மானியம், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் விவசாயத் துறையைச் சார்ந்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் விவசாய துறை பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.