அதிக புகார் பெற்ற நிறுவனம் முதலிடத்தில் ஏர்டெல்..! பெஸ்ட் பி.எஸ்.என்.எல்.!!
2021ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப்படியான புகார்களைப் பெற்ற டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ட்ராய் அமைப்பு. அவற்றில் அதிகப்படியான புகார்களை பெற்ற டெலிகாம் நிறுவனமாக முதல் இடத்தில்இருப்பது ஏர்டெல் நிறுவனம். ஏர்டெல் நிறுவனத்தின் மீது மட்டும் சுமார் 16,111 புகார்கள் 2021-ம்ஆண்டில் பெறப்பட்டுள்ளது.
2வது இடத்தில் உள்ள வோடபோன், ஐடியா நிறுவனத்திற்கு எதிராக 14,487 புகார்களும், மூன்றாவது இடத்தை பிடித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு எதிராக 7341 புகார்களும் வந்ததாக ட்ராய் அமைப்பு தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் பிஎஸ்என்எல் மீது 2913 புகார்கள் மட்டுமே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.