நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிலையில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணங்களை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
SBI வங்கி வரும் பிப்ரவரி 15 முதல் சில IMPS ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணங்கள் மற்றும் GST விதிக்க உள்ளது. UPI வரம்பை யாராவது மீறினால், பணப் பரிமாற்றங்களின் போது அவர்கள் அதிக IMPS கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை, இந்த சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பாதிக்கும்.
IMPS என்றால் என்ன? அதன்படி, பிப்ரவரி 15 முதல், IMPS மூலம் ரூ.25,000க்கு மேல் பணம் அனுப்புபவர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும். எனவே, பணம் அனுப்புவதற்கு முன் முறையாக திட்டமிட வேண்டும். IMPS என்றால் என்ன என்று சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். IMPS என்பது, உடனடி கட்டண சேவை ஆகும். இந்த முறையில், SBI YONO செயலி, மொபைல் வங்கி மற்றும் இணைய வங்கி மூலம் பணத்தை அனுப்பலாம்.
பிப்ரவரி 15 முதல், IMPS மூலம் ஆன்லைனில் ரூ.25,000 வரை பணம் அனுப்பினால், எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. அதுவே, ரூ.25,000க்கு மேல் இருந்தால், ரூ.1,00,000 வரை, ரூ.2 சேவை கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக GST வசூலிக்கப்படும். அதேபோல், ரூ.1,00,001 முதல் ரூ.2,00,000 வரை, ரூ.6 சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கும் கூடுதலாக GST வசூலிக்கப்படும். மேலும் ரூ.2,00,001 முதல் ரூ.5,00,000 வரை, ரூ.10 சேவை கட்டணம் வசூலிக்கப்படும். அத்துடன், கூடுதலாக GST வசூலிக்கப்படும்.
இந்தக் கட்டணங்கள் சிலருக்குப் பொருந்தாது. SBI ரிஷ்டே கணக்கு (SBI Rishtey Account) மற்றும் SBI சௌர்யா குடும்ப ஓய்வூதியக் கணக்கு (SBI Sourya Family Pension Account) வைத்திருப்பவர்களுக்கு இந்தக் கட்டணங்கள் பொருந்தும். மேலும், இந்தக் கட்டணங்கள் மத்திய அரசு கணக்குகள், பாதுகாப்புத் துறை, ரயில்வே துறை மற்றும் காவல் துறை சம்பளக் கணக்குகளுக்குப் பொருந்தாது. எனவே, இந்தக் கணக்குகளைப் பராமரிப்பவர்களுக்கு எந்தச் சுமையும் இல்லை.
தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ-யில் இதுபோன்ற கட்டணங்கள் குறைவாக இருப்பதாக பலர் நம்புகிறார்கள். வங்கியின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பதால் கட்டணங்கள் விதிக்கப்படுவதாக வங்கி மேலாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக, சாதாரண மக்கள் ஒரு நாளைக்கு ரூ.25,000-க்கும் அதிகமான பரிவர்த்தனைகளை அரிதாகவே செய்வதால் இந்தத் தாக்கம் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும் என்று மேலாளர்கள் கூறுகின்றனர்.



