அனைத்து கிறிஸ்துமஸ் பொருட்களும் ஒரே இடத்தில்.. விழாக்கால சிறப்பு விற்பனையில் திருச்சி கன்யா கிராப்ட்ஸ்!
அனைத்து கிறிஸ்துமஸ் பொருட்களும் ஒரே இடத்தில்..
விழாக்கால சிறப்பு விற்பனையில் திருச்சி கன்யா கிராப்ட்ஸ்! 💐🎅🎄👌
இயேசு கிறிஸ்து மண்ணில் அவதரித்த நாளை உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நாளை ஒட்டி கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான குடில்களை அமைத்து அதில் குழந்தை இயேசுவின் உருவம் தாங்கிய சுரூபத்தை வைத்து வணங்குவர். அந்தவகையில் நடப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் அலங்காரங்கள் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் திருச்சியில் உள்ள கன்யா கிராப்ட்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வைத்துள்ளது.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ஜோசப் ஆண்டனி கூறுகையில், கன்யா கிராப்ட்ஸ் நிறுவனம் 1991-ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 31ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தற்போது கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஏசு கிறிஸ்து சுரூபம், குடில் பொம்மைகள், சாண்டா கிளாஸ் பொம்மைகள் , கிறிஸ்துமஸ் மரம், ஒளிரும் வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் ஸ்டார்ஸ் விற்பனையை துவங்கியுள்ளோம். 2 அடி முதல் 20 அடி வரையிலான ஏசு கிறிஸ்து சுரூபங்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது.
வீடியோ லிங்:
பிளாஸ்டர் ஆப் பாரீஸ், பைபர், மார்பில், பாலிரெசிலின் உள்ளிட்ட பொருட்களால், எளிதில் உடையாத, மழை நீரில் கரையாத மற்றும் குறைந்த எடையுடன் கூடிய சுரூபங்களை சொந்த தயாரிப்பில் தரமாக, நேர்த்தியாக வடிவமைத்து வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வழங்கி வருகிறோம். இதுமட்டுமின்றி, வீடுகளில் வழிபாட்டிற்குரிய போட்டோ ப்ரேம், கிறிஸ்துவ சுரூபங்கள், மற்றும் பூசை உடுப்பு, பீட சிறுவர்கள் உடுப்பு, நற்கருணை பெட்டி, கதிர் பாத்திரம், பூசை பாத்திரங்கள், தூபகால், சிலுவை பாதை செட் உள்ளிட்ட அனைத்து விதமான ஆலயப் பொருட்களும் மொத்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்.
மேலும் விபரங்களுக்கு 94431 41569 மற்றும் 89036 16491 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.