ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்? அப்ப இந்த தகவல் உங்களுக்குத்தான்…
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. வழக்கமாக, ரயிலில் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பதற்கு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயற்சிக்க வேண்டியிருக்கும். அதுவும் விடுமுறை நாட்களில், பண்டிகை நாட்களில் டிக்கெட் கிடைக்கவே கிடைக்காது. ஆனால் இப்போது பிரச்சினையே இல்லை.
நீங்கள் பயணிக்கும் ரயிலில் ஏதேனும் பெர்த் காலியாக இருந்தால், அதைப் பற்றி இனி உடனடியாக நீங்கள் தெரிந்துகொள்ளலாம். உடனடியாக அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்யவும் முடியும். அதற்கான வசதி வந்துள்ளது. இந்த வசதி ரயில் பயணிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. உண்மையில், ரயிலில் எந்த இருக்கை காலியாக உள்ளது என்று தெரிந்துகொள்ளும் வசதி இதுவரை இல்லை.
IRCTC இப்போது இந்த வசதியை பயணிகளுக்கு புஷ் நோட்டிபிகேசன் வழங்குகிறது. நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் ஏதேனும் ஒரு பெட்டியில் இருக்கை காலியாக இருந்தால், அதன் அறிவிப்பு பயனாளிகளின் மொபைல் போனுக்கு தகவலாகச் செல்லும்.
பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக, பயனர் முதலில் IRCTC இணையதளத்திற்குச் சென்று புஷ் நோட்டிபி கேசன் வசதியைப் பெற வேண்டும். நீங்கள் விரும்பினால், இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்து உடனடியாக பயணம் செய்யலாம்.