அந்த வேலய நாங்களே செய்வோம்… தயார் செய்த எங்களுக்கு அழிக்க தெரியாதா? களமிறங்கும் நிறுவனங்கள்!
பொதுவாக எல்லா வாகனங்களும் இத்தனை ஆண்டுகள் வரைதான் பயன்படுத்த வேண்டும் என்று கணக்கு உள்ளது. இவ்வாறு இந்த காலகட்டத்தை மீறி பயன்படுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள், தேவையில்லாத மாசு உள்ளிட்டவை ஏற்படுகின்றன. பிற நகரங்களை காட்டிலும் டெல்லியில் இதன் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்த சூழலில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா கார்ஸ் நிறுவனமும், மாருதி சுசுக்கி டோயஸ்டு நிறுவனமும் இணைந்து பழைய வாகனங்களை அழிக்கும் மையத்தை துவங்குவதாக அறிவித்துள்ளன. இந்த கூட்டு நிறுவனம், பழைய கார்களை நல்லவிலைக்கு எடுத்துக்கொண்டு, பதிவு எண்களை அழிக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது, பழைய கார்களை அழிக்கும் பணிகள் டெல்லியை சுற்றியுள்ள புறநகர் பகுதியில் நடைபெற இருக்கிறது.
மேலும் ஹரியானா,உத்தரபிரதேச மாநிலங்களிலும் இதற்கான ஆலைகள் அமைய இருக்கின்றன சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் இந்த பணிகள் செய்ய இருப்பதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக அமைச்சர் நிதின்கட்கரி இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 அல்லது 3 பழைய வாகன அழிப்பு மையங்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பழைய வாகனங்களை அழித்து, அதற்கு பதிலாக புதிய வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரும்பட்சத்தில் இந்தியாவில் சந்தை வாய்ப்பு பெரியதாக இருக்கும் என்றும் நிதின் கட்கரி கூறியிருந்தார்.
இந்த திட்டத்துக்கு காலக்கெடு ஏதும் விதிக்கப்படாமல் இருந்த நிலையில் பழைய வாகனங்களை அழிக்கும் பிரத்யேக ஆலையை அமைக்க ஹோண்டா-மாருதி கூட்டு நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.