சிறந்த வேலையாட்களை பெற ஆலாய் பறக்கும் நிறுவனங்கள்
அதிக திறமை உள்ள வேலையாட்களை பெற்றிருக்கும் நிறுவனமானது, போட்டி நிறுவனங்கள் மத்தியில் சிறந்த மதிப்பை பெறுகிறது. இவர்களின் சிறந்த திறமையால் அந்த நிறுவனமானது சிறந்த லாபத்துடன் இயங்குகிறது. நிறுவனத்தின் குழப்பமான சூழ்நிலையில் இவர்களது சிறந்த நடவடிக்கைகளால் கம்பெனி பிரச்னைகளில் இருந்து விடுபடுகிறது.
இவர்கள் என்றென்றும் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கியே செல்கின்றனர். இவர்களது சிறந்த நடவடிக்கைகளால் சிறந்த பிராண்டாக பார்க்கப்படுகின்றனர். இவர்கள் நிறுவனத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றனர். இதனால் மேலும் அதிக திறமை கொண்ட நபர்களை நிறுவனம் பெறுகிறது.
நல்ல திறமையாளர்களை கவர நிறுவனங்களின் சிறந்த பிராண்ட் மற்றும் சிறந்த தலைமைப் பண்பு உள்ள நிர்வாகிகள், குழப்பம் இல்லா சிறந்த பணிச்சூழல், நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் ஆகியவையும் தேவையானதுதான். சில நிறுவனங்கள் கிடைக்கும் மொத்த ஆட்களையும் வேலைக்கு எடுத்து திறமையை சோதித்து திறமையற்றவர்களை துரத்துகின்றன. இவ்வகை நிறுவனங்களில் சேரும் திறமையான பணியாளர்களை, ஒரு கட்டத்துக்கு மேல் நிறுவனங்களால் கவரமுடிவதில்லை என்பதே உண்மை.