ஆன்லைனில் கடன் வாங்கியவர்கள் எல்லாம் ஆண்டி..
உடனடி கடன், எந்தவித டாக்குமென்டும் தேவையில்லை. இருபத்துநான்கு மணி நேரத்தில் கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என ஆசை வார்த்தை கூறி பேசுவார்கள். அல்லது அது போன்ற செயலிகள் குறித்த செய்திகள் உங்களை வந்தடையும். பணத் தேவையை மனதில் கொண்டு, ஆசை வாக்குறுதிகளை நம்பி அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் தளங்கள் / மொபைல் செயலிகளுக்கு இரையாக வேண்டாம்.
அதிகப்படியான வட்டி விகிதங்கள் மற்றும் கூடுதல் மறைக்கப்பட்ட கட்டணங்கள் கடன் வாங்குபவர்களிடமிருந்து கோரப்படுகின்றன. இது போன்ற நேர்மையற்ற செயல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும், ஆன்லைனில் அல்லது மொபைல் செயலிகள் மூலம் கடன்களை வழங்கும் நிறுவனம் / நிறுவனத்தின் முன்னோடிகளை நம்பி ஏமாற வேண்டாம்.
மேலும், நுகர்வோர் ஒருபோதும் அடையாளம் தெரியாத நபர்கள், சரி பார்க்கப்படாத, அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகளுடன் ரிசீசி ஆவணங்களின் நகல்களைப் பகிரக்கூடாது. இது போன்ற அங்கீகரிக்கப்படாத செயலிகள் / தளங்கள் பற்றிய புகார் அளிக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தையோ அல்லது ஆன்லைனில் புகாரை பதிவு செய்ய https://sachet.rbi.org.in portal-ஐ பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஜெ.கே..