திருச்சியில் திறப்பு விழா சலுகையாக தொடர்ந்து 30 நாட்களுக்கு தள்ளுபடி அறிவிப்பு
திருச்சியில் திறப்பு விழா சலுகையாக தொடர்ந்து 30 நாட்களுக்கு தள்ளுபடி அறிவிப்பு
திருச்சியில் 1890 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது எம். என் .நாகேந்திரன் சன்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் .நான்கு தலைமுறைகளாக தொடர்ந்து சிறப்பான முறையில் விற்பனை செய்து வரும் ஜவுளி நிறுவனம் தற்போது அதன் பங்குதாரர் விஷால் முரளிதரன் புதியதாக ஸ்ரீ நாகேந்திரம் சில்க் ஹவுஸ் என்ற பெயரில் புதிய ஜவுளி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
திருச்சி என். எஸ் .பி சாலை ஒத்தை மால் தெருவில் புதிதாக திறக்கப்பட்ட இந்த ஜவுளி நிறுவனம் குறித்து அதன் உரிமையாளர் கூறும்பொழுது, தலைமுறை வாடிக்கையாளர்களை கொண்டு மிகச் சிறப்பாக இயங்கி வந்த எங்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியாக அதே ஆதரவை வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் வழங்கும் வகையில் காஞ்சிபுரம், திருபுவனம் ,சேலம், அய்யம்பேட்டை, ஜலகண்டபுரம் ,மதுரை ஆகிய பகுதிகளில் நேரடியாக தரியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகளை தரிவித்துள்ளோம்.
மேலும் தற்போது ஸ்ரீ நாகேந்திரம் சில்க் ஹவுஸில் கல்யாண முகூர்த்த பட்டு புடவைகள் ,பட்டு வேஷ்டிகள் , பட்டு பாவாடைகள், பேன்சி புடவைகள் ,ராம்ராஜ் வேஷ்டி சட்டை துணிகள், சில்க் காட்டன், செட்டிநாடு காட்டன், ராணி சுங்கடி புடவைகள் ,அம்மன் பாவாடை ,சுவாமி பஞ்சகச்சம் ,சாய்பாபா வஸ்திரம் ,பவித்திர மாலைகள் ,கருங்காலி பொருட்கள் மற்றும் அனைத்து விதமான பூஜை பொருட்களும் விற்பனை செய்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் திறப்பு விழா சலுகையாக வரும் டிசம்பர் 7ஆம் தேதி வரை அனைத்து விதமான பட்டு துணி வகைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி என்றும் காட்டன் துணி வகைகளுக்கு 10% தள்ளுபடி அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.