தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் என்ற நவீன தொழில்நுட்பக் கருவியை பயன்படுத்தி புற்றுநோய் கட்டி அகற்றம் !
தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் என்ற நவீன தொழில்நுட்பக் கருவியை பயன்படுத்தி புற்றுநோய் கட்டி அகற்றம்..
தமிழகத்தில் முதல்முறையாக திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை சாதனை..
திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கு 87 வயதான முதியவர் பல்வேறு உடல் உபாதைகளுடன் சிகிச்சைக்கு வந்தார். அவரை பரிசோதனை செய்து பயாப்சி என்ற திசு பரிசோதனை செய்ததில் புற்றுநோய் கட்டி பெருங்குடலில் இருப்பது கண்டறியப்பட்டது.
வயது முதிர்வாலும் பல்வேறு உடல் உபாதைகள் இருந்ததாலும் மயக்க மருந்தை கிரகிக்கும் தன்மை இல்லாததால் அறுவை சிகிச்சை இவர் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் முதல் முறையாக ஸ்பீடு போட் இன்ஜெக்ட் எனப்படும் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தி பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை மருத்துவ குழுவினர் அறுவைசிகிச்சை இன்றி அகற்றி சாதனை செய்துள்ளனர்.
இந்த சாதனை குறித்து மருத்துவமனையில் மூத்த போதும் மேலாளர் சாமுவேல், மருத்துவ அதிகாரி டாக்டர் சிவம் வயிறு ,குடல் மற்றும் எண்டாஸ்கோப்பிக் சிறப்பு நிபுணர் டாக்டர் செந்தூரன், நிர்வாக பொது மேலாளர் சங்கீத், விற்பனை பிரிவு மூத்த மேலாளர் ஆனந்த் ராமகிருஷ்ணன், மயக்கவியல் நிபுணர்கள் சரவணன்,அழகப்பன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கத்தியின்றி ரத்தம் இன்றி அறுவை சிகிச்சை இல்லாமல் ஒரு 87 வயது முதியவருக்கு எண்டோஸ்கோபிக் மூலம் புற்றுநோய் கட்டி தமிழகத்தில் முதல் முறையாக ஸ்பீட் போட் இன்ஜெக்ட் எனப்படும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருச்சி அப்பல்லோ மருத்துவ குழுவினர் சாதனை செய்துள்ளனர்.
இது எதிர்காலத்தில் அறுவை சிகிச்சைக்கு ஒரு மாற்றாக விளங்கும் உணவுக்குழாய், இரைப்பை, பெருங்குடல், சிறுகுடலின் ஒரு பகுதி ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை இந்த முறையில் சரி செய்ய முடியும் என்று தெரிவித்தனர்.மேலும் இந்த சிகிச்சை முடிந்து மறுநாளே வீடு திரும்பி இயல்பான பணிகளை செய்யலாம் என்றும் தெரிவித்தனர்..
-சந்திரமோகன்