புதிய தொழில்முனைவோரா..? டிரேட்மார்க் பற்றி அறியவும்..!
நீங்கள் புதிதாக தொடங்க உள்ள நிறுவனத்தின் பெயர் அல்லது உற்பத்தி செய்து சந்தைப்படுத்தப்படும் பொருளின் பெயரினை, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வேறு எவரும் பயன்படுத்தாமல் இருக்க Trademark பெற்றுக் கொள்ளுதல் மிக அவசியமாகிறது.
உங்கள் நிறுவனத்தின் பெயர் அல்லது உற்பத்தி செய்யப்படும் பொருள் எந்த பிரிவில் வருகிறது, ஏற்கனவே அந்தப்பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டதா என்று Intellectual Property India-&வின் இணையத்தளம் (www.ipindia.nic.in) மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் பெயர் அங்கு பதிவு செய்யப்படவில்லையெனில் நீங்கள் பதிவு செய்ய விரும்பும் பெயரினை அதே இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அவ்வலுவலகத்திற்கு அனுப்பவும்.
நீங்கள் விண்ணப்பிக்கும் ட்ரேட் மார்கினை நாளிதழில் வெளியிடுவார்கள். அதற்கு வேறு எவரும் எதிர்ப்பு தெரிவிக்காதபட்சத்தில் உங்களுடைய பெயரினை ((Trademark) ) பதிவு செய்து தருவார்கள். உங்கள் ட்ரேட்மார்க் விண்ணப்பித்தவுடன் நீங்கள் உங்கள் பிராண்டுடன் ஜிவி என்று போட்டுக் கொள்ளவும்.
குறைந்தது உங்கள் (Trademark) உங்களுடையது என்று பதிவு செய்து சான்றிதழ் வழங்க ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் கிடைத்தவுடன் நீங்கள் உங்கள் பிராண்டுடன் ஸி என போட்டுக் கொள்ளலாம்.
உங்கள் பெயரை பதிவு செய்து தர ஆலோசர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய கட்டணத்தை கொடுத்துவிட்டால் அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து முடித்து தருவார்கள்.