வாசகர்களின் ஷொட்டுகள்…
‘போன்சாய் மரம்’ குறித்த செய்தி படித்தேன். தகவல்கள் சிறப்பாகவும், தெளிவாகவும் தொகுத்து வழங்கப்பட்டிருந்தது அருமை.
என்.திருநாவுக்கரசு, ஸ்ரீரங்கம்
கான்செப்ட் ஸ்டுடியோ பற்றிய செய்தி குறிப்பு பயனுள்ளதாக இருந்தது. வீடோ அல்லது அலுவலகமோ முழுமை பெறுவதற்கு அங்கு இருக்கக்கூடிய உபகரணங்களே காரணம் என எடுத்துக்காட்டி இருந்தது.
எஸ்.சிவசங்கரி, சஞ்சீவி நகர்.
பத்திரிக்கைகளில் செய்யப்படும் விளம்பரம் செலவா, முதலீடா என்ற செய்தி கட்டுரை படித்தேன். அச்சு ஊடகத்தில் வெளியாகும் விளம்பரங்களின் தாக்கம் பற்றிய தெளிவாக உணர்த்திருந்தது பார்த்தசாரதியின் கருத்துக்கள்.
எஸ்.சந்திரன், லால்குடி
பிஸ்னஸ் திருச்சி, என்னை போன்ற தொழில்முனைவோருக்கு ஒரு நல்ல இன்றியமையாத நண்பனாக இருக்கிறது.
என்.கதிரவன், பெரிய கடைவீதி.
பிஸ்னஸ் திருச்சியில் தொழிலில் வெற்றி பெறுவதற்கான வழியையும் பாதுகாப்பையும் கூறிய தகவல்கள் மகிழ்ச்சி. தரமான பேப்பரில், தெளிவான செய்திகள். வாழ்த்துக்கள்
கே.சீனிவாசன், சோமரசம்பேட்டை
ஏராளமான தொழில் வாய்ப்பு செய்திகளுடன் வெளிவரும் பிஸ்னஸ்திருச்சி இதழில் புதிய தொழில் முனைவோர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.
ஆர்.ராஜேந்திரன், திருவானைக்காவல்