Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

D.Pharm சான்று பெற்றவரா நீங்கள்? –  முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு !

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மிழ்நாடு சுதந்திர தினவிழா உரையில் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருத்துக்களையும், பிற மருத்துகளையும் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங் கள் துவங்கப்படும் என அறிவித்தார்கள்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள  D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்பத்துடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க mudhalvarmarundhagamtn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

dpharm3முதல்வர் மருந்தகம்  அமைக்க விருப்பமுள்ள தொழில்முனைவோர் 20-11-2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு (10Sqm) குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி ரசீது (அல்லது குடிநீர் வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது வாடகை இடம் எனில் இடத்திற்கான உரிமையாளரிடம் இடம் ஒப்பந்த பத்திரம் (Rental Agreement Documents) பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

dpharmமுதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும் மருத்துகளாகவும் வழங்கப்படும். தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். TABCEDCO THADCO மற்றும் TAMCO பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

தெறிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.100 லட்சம் விடுவிக்கப்படும். முதல்வர் மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்படும் தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள் குளிர்சாதனப் பெட்டி ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கால பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதி கட்ட மானியம் ரூ.150 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழக்கப்பட்டும் விற்பனைக்கு ஏற்ற ஊக்கத் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த நல்வாய்ப்பினை தொழில் முனைவோர் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.