தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் மொத்தம் 1லட்சத்து 17 ஆயிரத்து 491 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி அமைப்புச்சாரா தொழிலாளர் குழந்தைகளின் படிப்புக்கான கல்வித்தொகையாக 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 10ம் வகுப்பு முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கும், 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் 1000 முதல் 8000 வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வியாண்டில் பதிவு பெற்ற அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வருகிற மே 31ம் தேதிக்குள் tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும். இத்தகவலை திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.