23 வயதில் மீடியா துறையில் அசத்தும் திருச்சி இளைஞர்….
திருச்சியை பூர்வீகமாகக் கொண்டு 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி பிறந்தவர் ராஜேஷ் குமார். சிறுவயதிலேயே தந்தை இழந்த இவர் தாயாரின் உதவியோடு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். சிறு வயது முதலே கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பள்ளியில் சிறு சிறு நாடகங்களை மேடையில் இயற்றியதோடு மட்டுமல்லாமல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் என்று அழைக்கப்படும் Visual Communication துறை பயிலும் போது கல்லூரிக்குள் நடக்கும் நிகழ்வுகளை மட்டும் தொகுத்து கல்லூரி செய்தித்தாளில் வெளியிடும் பணியில் முக்கிய பொறுப்பினை வகித்தார்.
2019 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த இவர் உள்ளூர் தொலைக்காட்சியில் பணியாற்றிய அனுபவத் தைக் கொண்டு youtube சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். தற்போது Event Management துறையில் தடம் பதித்துள்ள இவர் கொரோனா காலகட்டத் தில் கல்லூரி மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்கும் நோக்கில், அவர்களுக்கென பட்டிமன்றத்தை நடத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட முயற்சியாக தொலைக்காட்சி பிரபலங்களான மதுரை முத்து மற்றும் கோவில்பட்டி அன்னபாரதி ஆகியோரைக் கொண்டு வருகிறது ஜூலை 30ம் தேதி திருச்சி தேவர் ஹாலில் ஒரு மாபெரும் பட்டிமன்றத்தை தனி ஒரு ஆளாக ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசினஸ் திருச்சி சார்பாக வாழ்த்துக்கள் ராஜேஸ்!