நடப்பு சம்பா சாகுபடிக்கு ஏ.டி. டி. 51 நெல் ரகத்தை விவசாயிகள் விரும்பி விதைத்து வருகின்றனர் இதனால் மாவட்ட முழுவதும் இந்த ரகம் விதை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் தொடங் கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் நீண்ட கால ரகமான ஏ.டி.டி 51ரகத்தை வாங்கி விதைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட் டுள்ளனர். 160 நாட்கள் வயதை கொண்ட இந்த ரகம், நீண்ட கால ரகம் ஆகும். எவ்வளவு மழை, வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடியது.
நோய் மற்றும் பூச்சி தாக்குதல் பெரிய அளவில் இருக்காது என்பதால் விவசாயிகள் இந்த ரகத்தை விரும்பி விதைத்து வருகின்றனர். இதனால் அரசு வேளாண் விரிவாக்கம் மையங்கள் மற் றும் தனியார் கடைகளில் இந்த ரக விதை கிடைக்கவில்லை. பெரும்பாலான விவசாயிகள் விரும்பும் இந்தரகத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாற்று விதைகளை விவசா யிகள் வாங்கும் நிலை ஏற்ப் பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மேட்டூர் அணையில் இருந்து காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு ஒரு போக சாகுபடியே சாத்தியம் என்ற நிலை உருவாகிவிட்டது. இதற்கு நீண்ட கால ரகம் விதைப்பது விவசாயிகளுக்கு நல்ல பலனை தரும். நீண்ட கால ரகமான ஏ.டி.டி. 51 ரகம் நல்ல விளைச் சலை தரக்கூடியது ஒரு ஏக்கருக்கு 50 மூட்டை களுக்கு மேலும் வினைச் சல் தரக்கூடியது பெரிய அளவில் உரம் போட தேவையில்லை. எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கி வளரும். இதனால் இந்த ரகத்தை விரும்புகிறோம். இவ்விதை தற்போது எங் கும் இருப்பில் இல்லை தட்டுப்பாடாக உள்ளது. இதனால் ஏ.டி.டி. 54 என்ற 135 நாள் விதையை விவசா யிகள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கோ 50, ஐ.ஆர் 20, ஏடி.டி. 42, ஆந்திரா பொன்னி போன்ற ரகங் களை தற்போது விவசாயிகள் வாங்கி வருகின்றனர். பல பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் ஏற்கனவே வாங்கி வைத்த ஏ.டி.டி ரக விதைகளை விதைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என்ற னர்