ஆண்டுக்கு 2 முறை மகசூலுக்கு வாய்ப்புள்ளது. மக்காச் சோளத்தின் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளதால் குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் துளுக்கம்பட்டி, நாஞ்சிக்கோட்டை, சாமிபட்டி. சூரியம்பட்டி, மருங்குளம், ஏழுபட்டி, மின்னாத்தூர், குருங்குளம், தங்கப்ப உடையான்பட்டி, தோழ கிரிபட்டி, கொத்தம்பட்டி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு மேட்டுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடியாக மக்காச்சோளத்தை சாகுபடி செய்திருந்தனர் தற்போது மக்காச்சோளம் அறுவடை பணியை விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏக்க ருக்கு 20 குவிண்டால் முதல் 30 குவிண்டால் வரை மக சூல் கிடைத்தது. தற்போது 15 குவிண்டாலில் இருந்து 20 குவிண்டால் வரை மட்டுமே மகசூல் கிடைக்கிறது. சில பகுதிகளில் கடந்தாண்டு போலவே 30 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டு மக்காச்சோளத்தை வாங்கிய வியாபாரிகள் குவிண்டால் ரூ.2500 வரை வாங்கி சென்றனர். ஆனால் தற்போது அதனுடைய விலை குறைந்து ரூ.2300க்கு வியாபாரிகள் வாங்குகின் றனர். அறுவடை செய்து வரும் சோளம் ஈரமாக உள்ளது. இதனால் விலை குறைத்து வியாபாரிகள் கேட்பதால் அறுவடை செய்த சோளத்தை நெடுஞ் சாலையில் பரவலாக கொட்டி வைத்து காய வைக்கும் நிலை உள்ளது. அறுவடை செய்த சோளத்தை நெடுஞ்சாலையில் பரவலாக கொட்டி வைத்து காய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சோளத்தின் மகசூலும் குறைந்து விலையும் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இருப்பினும் உடனுக்குடன் வியாபாரிகள் கொள்முதல் செய்து கொண்டு பணத்தை தருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த காலம் நிறைந்த வருமானம் கொடுக்கும் மக்காச்சோளத்தை மாற்றுப்பயிராக சாகுபடி செய்ய தொடங்கிவிட்டனர். இதன் சாகுபடி காலம் 4 மாதம் தான் அறுவடை செய்த இடத்திற்கே வந்து வியாபாரிகள் வாங்கி செல்வதால் பணமும் கைக்கு வந்து விடுகிறது. அதனால் கரும்பு சாகுபடி அளவை குறைத்து அதிக ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடுகின்றனர். ஆண்டுக்கு இருமுறை மக்காச் சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளும் உள்ளனர் என்றனர்.