பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர், திருவானைக்காவல், அரியலூர் ஆகிய பகுதிகளில் எக்செல் அக்ரோடெக்-குபோட்டா நிறுவனத்தின் டீலர்ஷிப் நிறுவனத்தின் கிளைகள் இயங்கிவருகிறது. இக்கிளைகளில் உலகத்தரமான தயாரிப்புகளான குபோட்டா நெல் நடவு எந்திரங்கள், களைஎடுக்கும் எந்திரம் மற்றும் டிராக்டர்கள், அறுவடை எந்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு எந்திரம் மூலம் நெல்நடவு, களை எடுத்தல் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குனர் சீதாபதி கூறுகையில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் குபோட்டோ எந்திரங்கள் மூலம் நெல் நாற்றங்கால், நெல்நடவு, களைஎடுத்தல் உள்ளிட்ட வேளாண் பணிகளை எளிதாக செய்வது குறித்து விவசாயிகளுக்கு 17-25 நாளான நெல் நாற்றங்கா செய்தல், களை எடுப்பது குறித்து அனுபவமிக்க வல்லுனர்களைக்கொண்டு நேரடி செயல்விளக்க கள பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சிகள் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பி.மேட்டூரில் வருகிற 24-ந்தேதியும், பெரம்பலூர் மாவட்டம் எழுமூரில் வருகிற 26-ந்தேதியும், திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா கே.வி.பேட்டையில் அடுத்த மாதம் அக்டோபர் 1-ந்தேதியும், பெரம்பலூர் மாவட்டம் டம் சிறுவாச்சூரில் அக்டோபர் மாதம் 3-ந்தேதியும் நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சியின் மூலம் விவசாயிகள் எந்திரங்களை பயன்படுத்தி அதிகமகசூல் மற்றும் அதிக லாபம் பெறலாம். ஆகவே சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் பெரம்பலூர்-9750959504, துறை யூர்- 9150055572, திருச்சி, லால்குடி- 9750959501 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்பு தங்களது பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு செயல்விளக்க பயிற்சியில் கலந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.