1) உங்கள் தொழிலுக்கு எந்த மாதிரியான இடம் தேவை என்பதை உணர்ந்து அதற்கேற்ப அலுவலக இடத்தை தேர்வு செய்யவும். ஸ்டார்ப் அப் உற்பத்தி நிறுவனம் என்றால் புறநகர் பகுதிகளில் தொடங்குவது அரசு மூலமும், வாடகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கும் பெரும் நன்மை தரும். அலுவலகம் அல்லது உற்பத்தி தொழில் என்றால் நீங்கள் அதற்கென தேர்வு செய்யும் இடத்திலேயே பாதி வெற்றி அடங்கியிருக்கிறது.
2) புதிய தொழில் என்றால் அதன் வளர்ச்சிக்கு ஏராளமான வாடிக்கையாளர்களும், நுகர்வோரும் தேவை. எனவே உங்கள் தொழில் எளிதாக அணுகத்தக்கதாகவும், அலுவலகம் எளிதில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மக்கள் வந்து வாங்கிச் செல்லும் தொழிலாக இருந்தால் இடம் மிகவும் முக்கியம்.
3) உங்கள் தொழில் இணைய வழியில் என்றால், வாடிக்கையாளர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டியதில்லை என்றால், புறநகர்ப் பகுதிகளில் கூட அலுவலகத்தை அமைத்துக்கொள்ளலாம்.
4) அலுவலக அறை தவிர்த்து பொருள் வைப்பு அறை, பணியாளர்களுக்கான அறை என இடம் தேவை குறித்து முன்பே திட்டமிட்டு அதற்கேற்ப அலுவலக இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
5) பிரம்மாண்டம் காட்ட வேண்டும் என்பதற்காகத் தேவைக்கு அதிகமான இடத்தைத் தேர்வு செய்தால், காலி இடத்திற்கும் சேர்த்து வாடகை கொடுக்க வேண்டும்.
6) இடம், உங்களின் தேவைகள் மற்றும் வசதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு தேவைக்கு ஏற்றவாறு உங்கள் அலுவலகத்தை இடமாற்றம் செய்து நிதிநிலைக்குத் தக்கவாறு வசதிகளை பெருக்கிக் கொள்ளலாம்.
7) உற்பத்தித் திறன் நடப்பு நிகழ்வுகள் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அலுவலக இடத்தைத் தேட வேண்டும். சிறப்பான பணியிடத்தை உங்கள் பணியாளர்களுக்கு அமைத்துத் தருவதன் மூலம் அவர்களின் மகிழ்ச்சியும் உற்பத்தித்திறனும் அதிகரிக்கும்.
8) மீண்டும் சொல்கிறோம். அலுவலகம் அல்லது உற்பத்தி தொழில் என்றால் நீங்கள் அதற்கென தேர்வு செய்யும் இடத்திலேயே பாதி வெற்றி அடங்கியிருக்கிறது..!