ஒரு மாதம் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் இந்த சவாலுக்கு தயாரா நீங்க?
ஒரு மாதக் காலம் ஹோட்டலில் சாப்பிடாமல் இருப்பது பலருக்கு கடினமாக இருக்கும். இது கடினமானதுதான். ஆனால், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் வழக்கமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கும்போது, நிறைய பணம் மிச்சமாகிறது என்பதை நீங்கள் கூடிய விரை விலேயே புரிந்துகொள்வீர்கள்.
உணவகங்களில் சாப்பிடு வதைத் தவிர்ப்பது மூலம் அதிக பணம் மிச்சமாகும். மேலும், அதிகப்படியான உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும் முடியும். மேலும், குடும்பமாக விசேஷ சந்தர்ப்பங்கள் அல்லது தினங் களில் மட்டும் வெளியே ஹோட்டலில் சாப்பிடுவது, உணவை ரசித்துச் சாப்பிட உதவும். பணத்தின் மதிப்பைக் குடும்பத்துக்கு உணர்த்தும்.
சுமார் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது, அதற்கு வெளி உணவு எதையும் தரமாட்டோம். வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு அல்லது தின்பண்டங்களை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுப்போம். பெரியவர்களுக்கும் இதையே பின்பற்றலாம். இதனால், பணம் மிச்சம். கூடவே ஆரோக்கிய மாகவும் இருக்கும்.
வெளியில் சாப்பிடாமல் இருப்பது நீங்கள் நினைப்பது போல் கடினம் அல்ல. பூங்கா அல்லது கடற்கரையில் குடும்ப மாக வீட்டில் சமைத்த உணவை எடுத்துச் சென்று அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவதுதான் நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்தது. இதனால் பணம் மிச்சமானதுடன், ஆரோக்கியமான உணவும் நமக்குக் கிடைத்தது!
நிறைவாக, இந்த நிதிச் சவால்கள் அனைத்தும், நீங்கள் சாப்பிட அல்லது வாழ்க்கையின் நல்ல விஷயங்களைப் பெறுவதற்குச் செலவு செய்யக் கூடாது என்று அர்த்தமல்ல. சரியான காரணங்களுக்காக நீங்கள் சரியான அளவில் பணத்தை செலவிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம் ஆகும்.
இந்தச் சுயக்கட்டுப்பாடு, கண்டபடி செலவு செய்யும் நுகர்வோர் குணத்துக்கு எதிராக உங்களை உளவியல் ரீதியாகத் தயார்ப்படுத்தவும், அதிகமாகச் சேமிக்கவும் உதவும்.
இந்தச் செலவுச் சவாலை நீங்கள் எதிர்கொள்ளத் தொடங்கியவுடன் நீங்கள் நிறைய கற்றுக்கொள்வீர்கள். நிதி திட்டமிடல் செயல்பாட்டில், குறைவாகச் செலவழிப் பதும், அதிகமாகச் சேமிப்பதும் முதல்படியாகும். அதற்கு இந்த நிதிச் சவால் உங்களுக்கு உதவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!