வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்: பேங்க் 4 நாள் லீவு..
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வருகின்ற மே 30, 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தில் ஈடுபடபோவதாக பேங்க் ஆஃப் பரோடா, மற்றும் சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டத்திற்கு, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், மே 30, 31 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் பேரணி மற்றும் தர்ணாவில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்ற மே 30, 31 ந் தேதிகள் மட்டுமின்றி அதற்கு முன் மே 28, 29 ந் தேதிகள் நான்காம் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கி இயங்காது.