கடன் வாங்கலியோ.. கடன் என கூவாத குறையாக வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு பெர்சனல் லோனுக்கான கடன் வட்டி விகிதத்தை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. கொரோனா முடிந்து இப்போது தான் மக்கள் நாலு காசு சம்பாதிக்க தொடங்கி இருப்பார்கள். ஆனால் அதற்குள் தீபாவளி.! கடன் வாங்கியாவது பண்டிகையை கொண்டாடுவது தானே நம்ம வழக்கம். அதை புரிந்து கொண்ட வங்கிகள் கடன் வேணுமா.. வாங்க சார் வாங்க.. என அழைக்கின்றன. சரி நீங்களும் அதற்கு தயாராக இருக்கிறீர்களா.? பெர்சனல் லோன் பெற எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் என தெரிந்து கொண்டு பின் கடன் வாங்க போகலாமே.
இந்தியன் பேங்க்-9.05%, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா-9.60%, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா -8.95%, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா-8.90%, பஞ்சாப் நேஷனல் பேங்க்-8.95%, பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா – 9.70% பேங்க் ஆஃப் பரோடா-10.25%, ஹெச்.டி.எஃப்.சி.பேங்க் – 10.75%, கொடாக் பேங்க் – 10.75%.