வருமானவரி கணக்கு காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
பொதுவாக ரூ.2,50,000 மேல் வருமானம் ஈட்டினால் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற மனநிலை பலரிடம் உள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட வருமானம் குறைவாக உள்ளவர்களும் வரி செலுத்தினால் சில நன்மைகள் உண்டு.
அதிகப்படியான வரிகளைத் திரும்பப் பெற, வீடு அல்லது வாகனக் கடன் பெறுவதற்கு, தொழில் செய்வோர்க்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட, சுயதொழில் புரிவோர் வங்கியில் தொழில் கடன் பெற வருமான வரிச் சான்றிதழ் கட்டாயமாகும். அதே போல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற சில நாடுகளில் உள்ள தூதரகங்கள் வருமான வரிசான்றிதழை கோருகின்றன. வெளிநாட்டில் வேலைக்கு செல்லவும். வணிகம் செய்யவும் வருமான வரிச் சான்றிதழ் அவசியமாகிறது.