பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்…
கடின உழைப்பால் உயர்ந்தவர்களை பற்றி ‘வணிகம் பழகு’ தொடரில் வாராவாரம் வெளியாகும் கட்டுரை சிறப்பாக உள்ளது. மிகவும் பயனுள்ளதாகவும், ஊக்கமளிக்கும் வகையிலும் உள்ளது இந்தத் தொடர்.
என்.முத்துகிருஷ்ணன், ஸ்ரீரங்கம்
சாமானிய மக்களுக்கு சிலிண்டர் விலை உயர்வு பெரும் சிரமமானதாக இருக்கிறது. இந்த இதழில், ‘பயோகேஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம்’ என்ற செய்தி சாமானியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ஆர்.சித்ரா, திருவரம்பூர்
சிறுதொழில்கள் பற்றிய தகவல்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க வழிகாட்டுதலாக உள்ளது. பிசினஸ் திருச்சி இதழுக்கு நன்றி!
என்.முகேஷ், ராம்ஜிநகர்
ntrichy.தடம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள ஊன்றுகோல் கட்டுரை, மூத்தோரின் முக்கியத்துவத்தையும், உறவுகளின் உன்னதத்தையும் உணர்த்துகிறது. பணத்திற்கு முக்கியத் துவம் கொடுக்கும் காலத்தில் உறவுகளின் நேசத்தை எடுத்துரைக்கும் பிசினஸ் திருச்சியின் பக்கம் மிகச்சிறப்பு.
வி.சந்திரபாபு, போலீஸ் காலனி
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு நேர்காணல் படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. இளைஞர்களுக்கு கூறிய அறிவுரை மேலும் சிறப்பாக இருந்தது.
என்.பார்த்தசாரதி, உறையூர்
என்.திருச்சி யூடியூப் வீடியோக்கள் QR SCAN செய்து பார்த்தேன். திருச்சியின் முக்கிய நிகழ்வுகள் பற்றிய வீடியோக்கள் பயனுள்ளதாக இருக்கிறது.
கே.சந்தானம், கருமண்டபம்