பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்:
பேட்டரி வாகனம் குறித்த புரிதலை ஏற்படுத்திய பிசினஸ் திருச்சி இதழிற்கு நன்றி..! பல பயனுள்ள தகவல்களுடன் வெளிவரும் பிசினஸ் திருச்சி இதழிற்கு வாழ்த்துக்கள்..!
-எஸ்.ராமச்சந்திரன், அரியாவூர்
சிறுதானிய உணவுகளை தயாரித்து வழங்கும் ஓ.எம்.ஜி. ஃபுட்ஸ் குறித்து உரிமையாளர் ஜெயஸ்ரீரீ சுரேஷ் கூறிய செய்திகள் அருமை.
வி.ராதிகா, தில்லைநகர்
இந்தியாவில் அதிக பெண் தொழில்முனைவோரைக் கொண்ட மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் விளங்குவது, ஏழைகள் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் இருப்பது போன்ற செய்திகள் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
-ஆர். கலாசந்திரன், பொன்மலை
வருவாய் தரும் இ.எம்.கரைசல் குறித்த செய்தியும், தபால் ஆபிஸ் தொடங்க விருப்பமா போன்ற செய்தியும் புதிய வருவாய்க்கான வாய்ப்புகளை எடுத்துக் காட்டுகிறது.
-என்.சங்கர், உறையூர்
சிலிண்டருக்கு மானியம் வருதா..? கண்டறியும் வழி.. 2022, மார்ச் 31 வரை பதியலாம் போன்ற சாமானியர்களுக்கான செய்திகளையும் பிசினஸ் திருச்சி தாங்கி வருவது சிறப்பு..!
-வி.சுதா, கல்கண்டார்கோட்டை
கிரிப்டோகரன்சி குறித்து தொடர்ந்து இரண்டு இதழ்களில் செய்தி கட்டுரை வெளியிட்டு கிரிப்டோகரன்சி குறித்து பெரும் புரிதலை ஏற்படுத்திவிட்டீர்கள்.
-என்.குமார், திருவரம்பூர்