பிராவிடன்ட் பண்ட் வாரிசுகளை நியமிக்க மின்னணு முறை..!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மின்னணு முறையில் வாரிசு பெயரை பதிவேற்றம் செய்யும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இ-சேவை இணையதளம் மூலமாக மின்னணு நாமினேசனை சந்தாதாரர்கள் சமர்ப்பிக்கலாம். சந்தாதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள், ‘வாரிசு’கள் புகைப்படம் மற்றும் ஆதார் தொடர் பான விவரங்களை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அனைத்து நிறுவனங்களும், தங்களுடைய ஊழியர்களுக்கு மின்னணு முறையில் ‘நாமினேசன்’ தாக்கல் செய்வது தொடர்பாக அறிவுறுத்த வேண்டும். மேலும் இதற்காக உதவி செய்யவேண்டும். மின்னணு நாமினேசனுக்காக குழு அமைக்கப்படும். இதுதவிர அலுவலக வளாகத்திலும் ஒரு குழு, சந்தாதாரர்களுக்காக செயல்படும் என தெற்கு மண்டல வைப்புநிதி ஆணையர் பி.ஹங்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.