மனை விலையை குறைத்த முதல்வர்..!
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள காலிமனைகளுக்கான மனை மதிப்பு 5 முதல் 75 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
சிட்கோ தொழிற்பேட்டைகளில் அதிக விலை காரணமாக பல ஆண்டுகளாக ஒதுக்கப்படாமல் இருந்த காலிமனைகளை கொண்ட தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால் தொழில்முனைவோர் எளிதில் வாங்க முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க் கப்படுகிறது.