ரிசர்வ் வங்கி அறிவிப்பு 9 முறை மாறாத வட்டி விகிதம்..!
2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் நிதிக் கொள்கை குறித்து 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு கூடி விவாதித்த எடுத்த முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ம அறிக்கையில், “குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4%ஆக நீடிக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35%ஆக நீடிக்கிறது.
இதன்மூலம் தொடர்ச்சியாக 9வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடருகின்றன. ரொக்க கையிருப்பு விகிதம்(சிஆர்ஆர்) 4 சதவீதத்திலும், எஸ்எல்ஆர் விகிதம் 18 சதவீதத்திலும் தொடரும். நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதத்தில் நீடிக்கும்.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.3 சதவீதமாக தக்கவைக்கப்பட்டுள்ளது” என்றார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மே.22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் 8 முறை வட்டி வீதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.