019-20ம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் நடவடிக்கையாக, ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் பரிசோதனை திட்டத்தை, ரூ.174.6 கோடி செலவில் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஒரு மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது இத்திட்டத்தை தலா ஒரு மாவட்டத்தில் அமல்படுத்த 15 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு சேவைகள் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டிலிருந்து செறிவூட்டப்பட்ட அரிசியை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கும் வகையில் விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும் என இந்திய உணவு கழகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.