தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் அதிகளவில் குவியும் கடைகள் ஐஸ்கிரீம் கடைகள் மற்றும் ஜூஸ் கடைகள்.
இங்கெல்லாம் தற்போது Ice Barயின் தேவையும் அதிகளவில் இருக்கிறது. இதுமட்டுமின்றி, மீன் மார்க்கெட்டில் அனைத்து நாட்களிலும் Ice Barயின் தேவை இருந்து கொண்டே இருக்கும். தற்போது Ice Bar தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
இத்தொழிலுக்கு முதலீடு என்பது தூய்மையான தண்ணீர் மற்றும் Ice Bar Making Machine மட்டுமே. Ice Bar Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் ஐஸ்கிரீம் கடைகள் மற்றும் ஜூஸ் கடைகளை கணித்து அவற்றுக்கு ஏற்றவாறு மிஷின் வாங்கி தொழிலை துவங்கலாம்.
முதலில் அருகில் உள்ள கடைகளில் துவங்கி பின்னர் டெலிவரிக்கு ஒரு வேலையாள் மட்டும் வைத்தால் மற்ற பகுதிகளில் உள்ள கடைகளிலும் எளிதாக வருமானத்தை பார்க்கலாம்.
இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் நீங்கள் தொடங்குவதற்கு உங்களிடம் 1,200 sq ft இடம் இருந்தாலே போதும்.
Ice Bar தயாரிக்க தூய்மையான தண்ணீரை எடுத்து Ice Bar Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தால் போதும் நமக்கு தேவையான ஐஸ் கட்டிகளை தயாரித்து தந்து விடும். பின்னர் அதனை விற்பனைக்கு அனுப்பி விடலாம்.
தோராயமாக 1 Ice Bar-ன் விலை 60 ரூபாய் – 75 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 200 Ice Bar-களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 12,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
தோராயமாக ஒரு வாரத்திற்கு 84,000 ரூபாய் முதல் 1,05,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.