கிரெடிட் கார்டுகள் அவசரநிலை செலவுகளிலிருந்து காப்பாற்றினாலும், தவறாக நிர்வகித்தால் கடன் சுமையாக மாறிவிடும் அபாயமாகவும் உள்ளது.
குறிப்பாக, அதிக வட்டி விகிதம் காரணமாக நிலுவைத் தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கிரெடிட் கார்டு கடனிலிருந்து வெளிவர இந்த 5 எளிய வழிகளைப் பயன்படுத்தலாம்.
- மின்னஞ்சல் & வங்கி பேசும் போனை கண்டிப்பாக கவனிக்கவும். வங்கிகள் உங்கள் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் (One-Time Settlement) செலுத்தும் வாய்ப்பை சில நேரங்களில் வழங்கலாம். இது கடனை ஒரே தவணையாக குறைந்த தொகையிலேயே முடிக்க உதவும். எனவே, வங்கியிலிருந்து வரும் மின்னஞ்சல்களை, அழைப்புகளை கவனமாக அணுகவும்.
- தனிநபர் கடன் (Personal Loan) மூலம் திருப்பி செலுத்தலாம். கிரெடிட் கார்டின் உயர்ந்த வட்டிக்கு மாற்றாக, குறைவான வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் பெறலாம். கிரெடிட் கார்டு வட்டி: வருடத்திற்கு 36-42% வரை. தனிநபர் கடன் வட்டி: வருடத்திற்கு 10-20% வரை. கடன் தொகையை EMIs ஆகக் கட்டுவதால், மாதாந்திர செலவுகள் சுமையாக இருக்காது.
- கடன் பரிமாற்றம் (Balance Transfer) செய்யலாம். கூடுதல் வட்டி செலுத்தாமல் இருக்க, நீங்கள் Balance Transfer மூலம் ஒரு குறைந்த வட்டி கொண்ட புதிய கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை மாற்றலாம். சில வங்கிகள் முதல் 6 முதல் 12 மாதங்களுக்கு 0% வட்டி வழங்கும். அதன்பிறகு 12-18% வட்டி கிடைக்கலாம், இது சாதாரண கிரெடிட் கார்டு வட்டியைவிட குறைவாக இருக்கும்.
- கடனை குறைப்பதற்கான EMI திட்டங்களை தேர்வு செய்யலாம். உங்கள் வங்கியில் EMI மாற்று வசதி (Convert to EMI Option) இருக்கிறதா எனசரிபார்க்கவும். சிறிய மாத தவணைகளாக செலுத்தலாம். 3 முதல் 24 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும். குறைவான வட்டி விகிதம் (12-18%) கிடைக்கும்.
- செலவுகளை குறைத்து, சிறிய தொகைகளை நிலுவைத் தொகைக்கு செலுத்துங்கள். ஒரே முறை பெரிய தொகை செலுத்த முடியவில்லை என்றால், நிலுவை தொகையில் இருந்து சிறிய தொகைகளை முறையாக செலுத்துங்கள். மாதத்திற்கு குறைந்தபட்சம் 10-20% செலுத்த முயற்சிக்கவும். தேவையில்லாத செலவுகளை குறைத்து, கிரெடிட் கார்டு மீதமுள்ள தொகையை முன்கூட்டியே செலுத்துங்கள்.
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை சரியாக நிர்வகித்தால், நீங்கள் கடன் சிக்கலிலிருந்து விரைவாக மீளலாம். சிறந்தது, உங்கள் மாத வருமானத்திற்கேற்ப உங்கள் செலவுகளை திட்டமிடுங்கள். உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதுகாக்கவும், எதிர்கால கடன் பெறுதலை எளிதாக்கவும் இந்த வழிகளைப் பயன்படுத்தலாம்.